ரஜினி நடிக்க இருக்கும் படம் ' கோச்சடையான்' . தீபிகா படுகோன், சரத்குமார், சிநேகா, நாசர், ஆதி, ஷோபனா, ஜாக்கி ஷெரப் உள்ளிட்டோர் இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். EROS நிறுவனம் MEDIA ONE நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இருக்கிறது.
கோச்சடையான் படம் ஆரம்பிக்கும் போதே ' ராணா ' படம் கைவிடப்பட்டதா என்ற கேள்விக்கு, ' கோச்சடையான் ' படம் முடிவடைந்த பின் 'ராணா' படத்தில் ரஜினி நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ' கோச்சடையான் ' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தவர்களை பார்க்கும் போது ரசிகர்களுக்கு பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
'ராணா' படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டு, அந்த படபூஜையில் கலந்து கொண்டார். அவரையே ' கோச்சடையான் ' நாயகியாக ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். சரத்குமார், சிநேகா இருவருமே ' ராணா ' படத்திற்கு ஒப்பந்தம் செய்தார்கள். தற்போது இருவரையும் ' கோச்சடையான் ' படத்திற்கும் ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.
'ராணா' படத்திற்காக கொடுக்கப்பட்ட சம்பளத்தை அப்படியே ' கோச்சடையான் ' படத்திற்காக மாற்றி இருக்கிறார்களாம். தீபிகா படுகோன், சரத்குமார், சிநேகா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் அனைவருமே ' ராணா ' படத்திற்காக கொடுக்கப்பட்ட தேதிகளை தான் ' கோச்சடையான் ' படத்திற்காக ஒதுக்கி கொடுத்து இருக்கிறார்கள்.
செளந்தர்யா ரஜினிகாந்த் 'சுல்தான், தி வாரியர்' என்ற ஒரு அனிமேஷன் படத்தினை நீண்ட காலமாக இயக்கி வந்தார். அப்படமும் கைவிடப்பட்டதாம். ' சுல்தான். தி வாரியர்', 'ராணா' இரு படங்களும் இணைந்ததே ' கோச்சடையான் ' என்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.
சுல்தானோ, ராணாவோ, கோச்சடையானோ என்ன படமாக இருந்தாலும் ரஜினியை எப்போது திரையில் காண்பது என்று ஏங்கி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
தஞ்சை குமணன்
9 comments:
Thank you boss
Thank u for u r information
Thank boss
sulthan variar+rana = kochadaiyan..
nice post
///குணசேகரன்... said...
sulthan variar+rana = kochadaiyan..
nice post///
Thank u boss
///sankar said...
Thank boss///
ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு Thank u boss....
///sharbu007 said...
Thank u for u r information///
என்ன படமாக இருந்தாலும் ரஜினியை எப்போது திரையில் காண்பது என்று ஏங்கி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.
உருமாறுகிற ரஜினியை என்ன படமாக இருந்தாலும் திரையில் காண்பது என்று ஏங்கி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்
nice post Thank boss
Post a Comment