Followers

Tuesday 26 November 2013

கள்ள மனம் கயவு குணம்

ரொம்ப நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்று எழுதுகிறேன்

தோணியதை மட்டும் பெரிதாக நினைக்கும்
பிஞ்சு மனம் பிள்ளைகுணம் எதற்கு,
கள்ள மனம் கயவு குணம் எதற்கு
காட்டுக்குள் சிங்கம் பசித்திருந்தது எதற்கு
சூறாவளி நம்மை என்ன செய்யும்
மழலைகளுக்கு தெரியாத பேய்களின் குணம் எதற்கு
பூச்சிக்கு தெரியாத கடலின் ஆழம் எதற்கு
நல்லவன் என்றும் வாழ்வான் என்பதற்கு
காணும் எதுவும் நமக்கே சொந்தம் அல்ல
பிச்சை போடவும் பணமும் இருக்கனுமா
நல்ல சொக்காய் போட்டவன் பணக்காரன் அல்ல
என்னாலும் எதுவும் செய்ய முடியுமா என்ன
பூமிக்கு என்று கடவுள் வர போகிறாரோ
பங்கு வர்த்தகங்களும் பரிமாற்றங்களும் எதற்கு
பாராட்டுக்கள் என்றைக்கு எல்லோருக்கும் கிட்டும்
என்று யாருக்கும் தலைவலி வராது
சளி பிடித்தாலும் பால் அருந்தலாமோ
நயவஞ்சகம் இன்னும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது
வேலை என்று எல்லோருக்கும் கிட்டும்
எல்லோராலும் பேச முடியம் தானே
அருஞ்செயல் எல்லோராலும் செய்ய முடியும் தானே
நான் என்று பிழைத்துக்கொள்வேன்....

தஞ்சை குமணன்

Wednesday 29 May 2013

இந்தியாவில் நாத்திகர்கள் அதிகரிக்கின்றனர்

கண்ட கண்ட மதவாதிகள் தான் கும்பிடும் மதத்தையும் மூடநம்பிக்கை பழக்க வழக்கத்தையும் தான் உலகில் பெரியது என்று எண்ணும் போது என்னைப் போன்ற பகுத்தறிவாளர்கள் நாங்கள் தான் இந்தியாவில் அதிகம் என்று எண்ணுவதில் தப்பேதும் இல்லை.

மூடப் பழக்கமுள்ள மதவாதிகளே மூடிக் கொள்ளவும். இல்லை கழுவி வைத்துக் கொள்ளவும். 

தஞ்சை குமணன்