Followers

Saturday 19 May 2012

ஐபிஎல் மேட்ச் பிக்சிங்:இலங்கை வீரருக்கு ரூ.10 கோடி வழங்கப்பட்டது?


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்,மேட்ச் பிக்சிங் எனப்ப்டும் போட்டி  நிர்ணயத்துக்காக இலங்கை வீரருக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது என்று ஆட்ட  நிர்ணயக்காரர் ஒருவர் சாட்சியமளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் அவர் தனது சாட்சியத்தில்,சில இந்திய வீரர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக   குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் தொடர்பாக, மலாட் என்று அழைக்கப்படும் சோனு யோகேந்திரா  ஜலான் என்பவரும் பஹாஜி என்றழைக்கப்படும் தேவேந்திரா கோத்தாரி என்பவரும் கடந்த  17 ம் தேதியன்று மும்பையில் வைத்து குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது  செய்யப்பட்டனர்.

இவர்கள் சர்வதேச ரீதியில் மேட்ச் பிக்சிங்சதியில் ஈடுபடுகின்றவர்கள் என்று  நம்பப்படுகிறது. 

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி சோனு என்ற  கிரிக்கட் போட்டி நிர்ணயக்காரர், தமது சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம், மாதம்  ஒன்றுக்கு 500 கோடி ரூபாய் வருமானமாக பெறுவதாக தெரியவந்துள்ளது. 

இவருக்கு ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,தென்னாப்ரிக்கா, சவூதி அரேபியா மற்றும்  இந்தியா ஆகிய இடங்களில் வாடிக்கையாளர்கள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக  தகவ்ல்கள் கூறுகின்றன. 

நன்றி : விகடன்.காம்

தஞ்சை குமணன்

Friday 18 May 2012

அ.தி.மு.க. ஆதரவுடன்தான் மதுரை ஆதீனமானேன்:நித்யானந்தா


அ.தி.மு.க. ஆதரவுடன்தான் தாம் மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

திருவாரூர் அருகே கச்சனத்தில் உள்ள கோவிலுக்கு இன்று தரிசனம் செய்ய வந்த நித்தியானந்தா,செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ”அ.தி.மு.க.வின் ஆதரவுடன்தான் நான் இளைய ஆதீனமாக பொறுப்பேற்றேன்.இந்த அரசு எங்களுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு அளிப்பதாலேயே எங்களால் பல இடங்களுக்கு சென்றுவர முடிகிறது.

காஞ்சி சங்கராச்சிரியார் ஜெயேந்திரர் எனக்கு எதிராக இனி குற்றச்சாட்டு எழுப்பினால்,அவர் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும். ஆதீனம் இடத்தை ஆக்கிரமித்து இருப்பவர்களை ஓடஓட விரட்டுவேன்”என்று கூறினார்.

நல்ல உலகமடா. விட்டா இவரு அறநிலையத்துறை மந்திரி கூட ஆவாரு

நன்றி : விகடன்.காம்

தஞ்சை குமணன்