Followers

Saturday 20 December 2014

ஆரூர் மூனா - பிகே படம் பார்க்க விரும்பிய கதை

அதனால் முதல் காட்சிக்கு நான் செல்லவில்லை. ஆனால் அந்த படத்தின் ரிசல்ட் கேள்விபட்டவுடன் இரவுக்காட்சிக்கு சென்றே ஆக வேண்டும் என்று முடிவு செய்து படையை திரட்டிக் கொண்டு கிளம்பினால் சத்யம் ஹவுஸ்புல். அடுத்ததாக சென்றது மெலோடி என்று நினைக்கிறேன் நினைவில் இல்லை, அங்கும் ஹவுஸ்புல். அண்ணாவில் முதல் வரிசையில் தான் இடமிருந்தது. அண்ணா திரையரங்கம் எனக்கு தெரிந்து ஹவுஸ்புல்லானது அன்று தான்.


முன்னாபாய் படத்தை விட லகே ரகோ முன்னாபாய் படம் ட்ரிபுள் ஹிட். காட்சியமைப்பிலும். அப்படித்தான். கிட்டத்தட்ட காலாவதியாகி விட்டது என்று நினைத்த காந்தியிசம் இந்த காலத்திற்கு எப்படி பயன்படுத்த முடியும் என்பதை பக்காவான திரைக்கதையில் சொல்லி அசத்தியிருந்தார். மதிப்பில் மேலும் சில படி உயர்ந்தார் இயக்குனர்.


Friday 19 December 2014

ஆரூர் மூனா - PK - சினிமா விமர்சனம்

பசிக்கிறது சாப்பாடு வேணும் என தான் வாங்கிய சாமி சிலையிடம் அமீர்கான் வேண்ட ஒரு அம்மா சம்சா வழங்க பிரமித்துப் போய் ரிமோட் வேணும் என வேண்ட, கிடைக்காமல் சிலை கொடுத்தவனிடம் சண்டை போட, அவனோ கோயிலுக்குள் சென்று பிரார்த்தித்தால் கிடைக்கும் என சொல்ல, அங்கும் ரிமோட் கிடைக்காமல் போலீஸில் கம்ப்ளைண்ட் பண்ணுவது என மனுசன் பின்னுகிறார்.


கோயில் ஏமாற்றியதால் தேங்காய், பூ, பழம் சகிதம் சர்ச்சுக்கு போய் பூஜை செய்வதும், சர்ச்சில் இருப்பவர்கள் விரட்டும் போது, சர்ச்சில் ஒயினை பிரசாதமாக வழங்குகிறார்கள் என்று அறிந்ததும், ரெண்டு ஒயின் பாட்டிலுடன் மசூதிக்கு செல்வது என அதகளம் பண்ணுகிறார் அமீர்.

Thursday 11 December 2014

ஆரூர் மூனா - லிங்கா

வேறென்ன சொல்ல ரஜினி ரஜினி. இந்த ஒரு வார்த்தை போதும் மனம் மகிழ. மூளைக்கு தெரிகிறது இதெல்லாம் அதிகம் என. ஆனால் என்ன செய்ய மனது இதைத்தான் விரும்புகிறது.





ரஜினி சந்தானம் அன் கோவுடன் சென்னையில் திருட்டு தொழில் செய்து வருகிறார். தாத்தா ராஜா லிங்ககேஸ்வரன் சொத்துக்களை இழந்து குடும்பத்தை நிர்க்கதியில் விட்டு விட்ட கோபத்தில் இருக்கிறார் பேரன் லிங்கா. 


ஆனால் தாத்தா கட்டிய கோயிலை அவர் தான் திறக்க வேண்டும் என ஊர்க்காரர்கள் விரும்பி அனுஷ்கா மூலம் ரஜினியை ஊருக்கு அழைத்து வருகின்றனர். அங்கு மரகதலிங்கத்தை திருட முயற்சிக்கும் போது தாத்தாவின் கதை தெரிய வருகிறது.

மேலும் படிக்க

Wednesday 3 December 2014

ஆரூர் மூனா - ஒரு விபத்தும், 23ம் புலிகேசி படமும்

ஆம்புலன்ஸில் ஏற்றி அவன் தலையில் துணியை சுற்றி என் மடியில் வைத்துக் கொண்டேன். அவனுக்கு நினைவு இருந்தது. ஆந்திரா பையன் எப்படி விபத்து நடந்தது என்று தெலுகில் என்னிடம் கூறிக் கொண்டே வந்தான். ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனை உள்ளே நுழையும் போது சிறு விசும்பலுடன் தலை தொங்கியது.
மருத்துவர்கள் சோதித்து அவன் இறந்து விட்டதாக சொல்லி விட்டார்கள்.

மேலும் படிக்க


Monday 1 December 2014

ஆரூர் மூனா - வீரவன்னியர், வீரதேவர், வீரகவுண்டர் தேவையா?

அது என்னங்கடா வீர வன்னியன், முரட்டு தேவன், வீர கவுண்டன், தெறி வீர மறவன்னு அடைமொழி, அதுவும் பேஸ்புக்ல. நீங்கள்லாம் அரிவாள்ல பல்லு தேய்ச்சி கத்தியால காலை டிபன் சாப்பிடுறவனுங்களா. 
ஏன், நான் வீரன்டான்னு சொல்லி ஒரு அய்யர் ஓட்டல்ல போய் காசு கொடுக்காம சாப்பிட்டு பாரு. நிஜமாவே ஒரு வீர அய்யரை அங்க பாப்ப.
நிஜத்துக்கு பக்கத்துல வாழப் பழகுங்கடா வெங்காயங்களா. 

அந்த பொங்கலுக்கு காரணம்
ஒரு நாள் காலையில் ஊர்ப்பக்கத்தை சேர்ந்த ஒருத்தர் உள்டப்பியில் வந்து நீங்க எங்க சாதி தானே, அதனால் பின்னாடி வீர .............................. அப்படின்னு போட்டுக்கங்க. அப்பத்தான் கெத்தா இருக்கும்ன்னார்.

மேலும் படிக்க


Sunday 30 November 2014

ஆரூர் மூனா - காவியத்தலைவன் படம் பார்த்த / பார்க்க விரும்பிய கதை

வசந்தபாலன் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் தோத்தவனை நாயகனாக வைத்து அவர் இயக்கிய வெயில் எனக்கு மிக மிக நெருக்கமான படம். அந்த படத்தில் வரும் பசுபதி கேரக்டர் கிட்டத்தட்ட நானே தான். பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டரில் அந்த படத்தின் க்ளைமாக்ஸ் நேரத்தில் நான் அழுத அழுகைக்கு தியேட்டரில் அமர்ந்திருந்த எல்லோரும் என்னை ஆறுதல்படுத்தினர். காருக்குள் கில்மா பண்ணிக்கிட்டு இருந்த ஜோடிகள் உள்பட.



 

அங்காடி தெரு படமும் அப்படித்தான். நான் படம் பார்த்து ஓவராக உணர்ச்சி வசப்பட்டு சேர்மக்கனி ரொம்ப கஷ்டப்படுறா, நானே கட்டிக்கிறேன்னு என் வீட்டம்மாக்கிட்டயே சொல்லி டின்னர் சாப்பிடும் போது நடுமுதுகிலேயே மிதி வாங்கினேன்

மேலும் படிக்க

Saturday 29 November 2014

ஆரூர் மூனா - நாத்திகர்கள் கோவிலுக்கு செல்லக் கூடாதா

ஒரு பதிவர் அவர், பெயர் வேண்டாமே. அவ்வப்போது வந்து என்னிடம் வாலன்டியராக சாட் பண்ணுவார். நான் ப்ரீயாக இருக்கும் போது பதிலளிப்பேன். நான் திருவாரூர்க்காரன் என்று அறிந்ததும் தேர் பற்றியும் மும்மூர்த்திகள் பற்றியும் விவாதிப்பார். எனக்கு தெரிந்தவற்றை நான் கூறுவேன். தல புராணம் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார்.

மேலும் படிக்க


Saturday 15 February 2014

திருச்சியின் தேவதையே எனக்கான சுந்தரியே

அன்புள்ளம் கொண்ட மக்களே,
 நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு பதிவு. என்னவளுக்காக.

திருச்சியில் வாழும் மனதிற்கினிய மங்கையே
என் வாழ்வின் கங்கையே
மனமெல்லாம் பொங்கியே
உனக்காக மட்டும் சொல்கிறேன் இங்கயே
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்


"தாவணியில் தேவதையாய்
கண்ணுக்கு தோன்றியதால்
தினம் அவளை காணவேண்டி
வேட்டியும் விபூதி பட்டையுமாய்
சாயரட்சை வேளையில்
பெரிய கோவிலில் காத்திருந்தேன்


தோழியுடன் வந்தமரும் அவளை
தரிசனம் செய்ய வேண்டி
எப்பொழுதும் பின்வரிசை
இடத்தினிலே நிரந்தரமாய்
நின்றிருந்தேன் ஒத்தையிலே

கண்கள் மெல்ல மூடி
மெல்லியதாய் மந்திரத்தை
மனமுருகி வேண்டிக் கொண்டே
பிரார்த்திக்கும் அவள் முகத்தை
காண கண் கோடி வேண்டும்"

என்று உனை நினைத்து காதலும் கசிந்துருக
கவிதை தான் பாடிடவே ஏங்குதே என் மனமே

கரம்பிடிக்கும் நாளை எண்ணி காத்திருக்கேன்
கிளிபோலே
அந்த நாளை நினைத்து மனது ஆர்பரிக்கிறது
அலைபோலே

தஞ்சை குமணன்