Followers

Thursday, 2 February 2012

பிரபல நடிகை குடிபோதையில் கைதுகடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.


உயிர் வருக்கம்
1. அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.
13. அ·கம் சுருக்கேல்.

உயிர்மெய் வருக்கம்
14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப் போல் வளை.
16. சனி நீராடு.
17. ஞயம்பட உரை.
18. இடம்பட வீடு எடேல்.
19. இணக்கம் அறிந்து இணங்கு.
20. தந்தை தாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர் செய்.
23. மண் பறித்து உண்ணேல்.
24. இயல்பு அலாதன செய்யேல்.
25. அரவம் ஆட்டேல்.
26. இலவம் பஞ்சில் துயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகு அலாதன செய்யேல்.
29. இளமையில் கல்.
30. அரனை மறவேல்.
31. அனந்தல் ஆடேல்.

ககர வருக்கம்
32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப்பட வாழ்.
35. கீழ்மை அகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.
38. கெடுப்பது ஒழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41. கொள்ளை விரும்பேல்.
42. கோதாட்டு ஒழி.
43. கௌவை அகற்று.

சகர வருக்கம்
44. சக்கர நெறி நில்.
45. சான்றோர் இனத்து இரு.
46. சித்திரம் பேசேல்.
47. சீர்மை மறவேல்.
48. சுளிக்கச் சொல்லேல்.
49. சூது விரும்பேல்.
50. செய்வன திருந்தச் செய்.
51. சேரிடம் அறிந்து சேர்.
52. சையெனத் திரியேல்.
53. சொற் சோர்வு படேல்.
54. சோம்பித் திரியேல்.

தகர வருக்கம்
55. தக்கோன் எனத் திரி.
56. தானமது விரும்பு.
57. திருமாலுக்கு அடிமை செய்.
58. தீவினை அகற்று.
59. துன்பத்திற்கு இடம் கொடேல்.
60. தூக்கி வினை செய்.
61. தெய்வம் இகழேல்.
62. தேசத்தோடு ஒட்டி வாழ்.
63. தையல் சொல் கேளேல்.
64. தொன்மை மறவேல்.
65. தோற்பன தொடரேல்.

நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி.
67. நாடு ஒப்பன செய்.
68. நிலையில் பிரியேல்.
69. நீர் விளையாடேல்.
70. நுண்மை நுகரேல்.
71. நூல் பல கல்.
72. நெற்பயிர் விளைவு செய்.
73. நேர்பட ஒழுகு.
74. நைவினை நணுகேல்.
75. நொய்ய உரையேல்.
76. நோய்க்கு இடம் கொடேல்.

பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்.
78. பாம்பொடு பழகேல்.
79. பிழைபடச் சொல்லேல்.
80. பீடு பெற நில்.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
82. பூமி திருத்தி உண்.
83. பெரியாரைத் துணைக் கொள்.
84. பேதைமை அகற்று.
85. பையலோடு இணங்கேல்.
86. பொருள்தனைப் போற்றி வாழ்.
87. போர்த் தொழில் புரியேல்.

மகர வருக்கம்
88. மனம் தடுமாறேல்.
89. மாற்றானுக்கு இடம் கொடேல்.
90. மிகைபடச் சொல்லேல்.
91. மீதூண் விரும்பேல்.
92. முனைமுகத்து நில்லேல்.
93. மூர்க்கரோடு இணங்கேல்.
94. மெல்லி நல்லாள் தோள்சேர்.
95. மேன்மக்கள் சொல் கேள்.
96. மை விழியார் மனை அகல்.
97. மொழிவது அற மொழி.
98. மோகத்தை முனி.

வகர வருக்கம்
99. வல்லமை பேசேல்.
100. வாது முற்கூறேல்.
101. வித்தை விரும்பு.
102. வீடு பெற நில்.
103. உத்தமனாய் இரு.
104. ஊருடன் கூடி வாழ்.
105. வெட்டெனப் பேசேல்.
106. வேண்டி வினை செயேல்.
107. வைகறைத் துயில் எழு.
108. ஒன்னாரைத் தேறேல்.
109. ஓரம் சொல்லேல்.தஞ்சை குமணன்

டிஸ்கி : நானும் பலமுறை இது தான் தம்பி ஆத்திச்சூடி, நம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்று, இதனை கடைபிடித்தால் நாம் ஒழுக்கமுடன் வாழ்வோம் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். ஒருத்தனும் கேட்கிற மாதிரி தெரியல, அதான் இப்படி. தலைப்ப பார்த்து ஜொள்ளு விட்டு வந்தாலும் உள்ள வந்து வாழ்க்கைக்கு நல்ல விஷயத்தை கத்துகிட்டு போங்க.13 comments:

NAAI-NAKKS said...

Yowwwwwwwwwww.......!!!!!

Venkatesh said...

சூப்பர்ப்பா, நானும் ஆத்திசூடி ரெம்ப நாளா தேடிக்கிட்டு இருந்தோன் … ஈ…ஈ…ஈ…ஈ…

Anonymous said...

ohh iduthaan aathichudi ah!!!

Anonymous said...

padhivu nandru thamizhum nandru

۞உழவன்۞ said...

cool

ஆரூர் மூனா செந்தில் said...

ஏன் தம்பி ஏன். இந்த கொலைவெறி எதுக்கு. உன் பதிவை நம்பி உள்ள வந்து பாத்துட்டு எவ்வளவு பேரு கடுப்புல இருக்கானுங்க தெரியுமா.

Anonymous said...

எனக்குத் தெரியும் ஆத்திச்சூடிதான் இருக்கும்னு.நல்லாருக்கு.

bandhu said...

ஆஹா.. எப்படியெல்லாம் யோசிக்கறாங்க.. ரூம் போட்டு யோசிப்பீங்களோ!

sharbu007 said...

ஆஹா..ரெம்ப நாளா எனக்கும் தெரியும்...
நல்லாருக்கு..

sankar said...

ரெம்ப நல்லாருக்கு..

karthik87 said...

நடிகை குடிபோதையில் கைது ரெம்ப நல்லாருக்கு..

அக் ஷயா said...

விவாதத்தில் ஏன் இந்த கொலைவெறி

ரங்குடு said...

அடுத்தது கொன்றை வேந்தன், மூதுரை எல்லாம் எப்போ போடப்போறீங்கோ?

டைட்டில் சூப்பர்.

Post a Comment