Followers

Wednesday, 11 January 2012

நண்பன் விமர்சனம்விஜய், ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா நண்பர்கள். இஞ்சினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு சேர்கிறார்கள். இவர்களது சக கல்லூரி மாணவன் சத்யன். கல்லூரி முதல்வர் சத்யராஜ். அவரது மகள் இலியானா. படிப்பில் எப்போதும் முதல் மாணவனாக வருகிறார் விஜய். எப்போதும் கடைசியில் வருபவர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா. சத்யராஜின் கண்டிப்பு விஜய்க்கு பிடிக்கவில்லை.  சத்யன் குறுக்குவழியில் முதலிடத்தை கைப்பற்ற நினைப்பவர். சத்யராஜூக்கும் விஜய்க்கும் ஏற்படும் கருத்து மோதலால் சத்யராஜூக்கு விஜயை பிடிக்கவில்லை. சத்யராஜின் மகள் இலியானாவுடன் முதலில் மோதலில் ஈடுபடும் விஜய் பிறகு காதலிக்கிறார். இலியானாவும் தான். ஸ்ரீகாந்த் விலங்குகளை புகைப்படமெடுப்பதில் ஆர்வமிருக்க பெற்றோரின் கட்டாயத்தினால் இஞ்சினியரிங் படிக்க வந்திருப்பதை அறிகிறார் விஜய். ஜீவாவுக்கும் படிப்பில் ஆர்வமில்லாததை அறிகிறார்.

ஸ்ரீகாந்த், ஜீவா இருவரையும் அவர்கள் விரும்பும் துறைக்கு பல மோதல்கள், ஜீவாவின் தற்கொலை முயற்சி, இலியானா அக்காவின் பிரசவம், சத்யனின் தில்லுமுல்லுகள் ஆகியவைகளை தாண்டி அனுப்பி வைத்து வெற்றி பெறவும் வைக்கிறார். ஸ்ரீகாந்த் ஒரு புகழ் பெற்ற விலங்குகள் புகைப்படக்காரர் ஆகிறார். ஜீவாவுக்கு கேம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலையும் கிடைக்கிறது. சத்யராஜூம் திருந்தி விடுகிறார். இவ்வளவும் செய்யும் விஜய் படிப்புக்காலம் முடிந்ததும் இவர்களை விட்டு விலகி விடுகிறார். காணாமல் போன விஜய் என்னவானார், ஸ்ரீகாந்த்தும் ஜீவாவும் அவரை கண்டுபிடித்தார்களா என்பதே படத்தின் கதை.

விஜய் நடிப்பில் அசத்தியிருக்கிறார். முந்தைய படங்களில் உள்ள பில்ட்அப்புகள் போல் இல்லாமல் படத்தில் கதையை ஒட்டிய பிலட்அப்புடன் வலம்வருகிறார். முதல் அறிமுக காட்சியில் காலேஜ் சீனியருக்கு சிறுநீர் போகும் போது கரண்ட் ஷாக் வைக்கும் போதும், கல்யாணத்தில் முதல்முறையாக இலியானாவை சந்தித்து அட்வைஸ்கள் கொடுத்து சத்யராஜிடம் மாட்டிக் கொள்ளும் போதும்,  இன்னும் பல பல காட்சிகளில் அசத்துகிறார். கண்டிப்பாக விஜய்க்கு இது சூப்பர்ஹிட் படம் தான்.

ஜீவா அவரது இன்னொசன்ட் நடிப்பில் அசத்துகிறார். சரக்கடித்து விட்டு சத்யராஜ் வீட்டில் ஒன்னுக்கு அடித்து விட்டு மறுநாள் வகுப்பில் சத்யராஜிடம் மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொள்ள மாடியில் இருந்து குதிக்கும் போது நெகிழ வைக்கிறார். ஸ்ரீகாந்துக்கு இத்தனை நாளாக இறங்கிக் கொண்டிருந்த கிராப்பை ஏற்ற வந்திருக்கும் படம் இது. சத்யன் படம் முழுக்க வருகிறார். படமே அவரைச்சுற்றி தான் இயங்குகிறது. இனிமேல் கண்டிப்பாக அவருக்கு தமிழ்படங்களில் காமெடிக்கு முக்கய இடம் கிடைக்கும். படத்தின் பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் அருமையாக உள்ளது.

இலியானா சும்மா பார்க்கும் போதே கிக்கு ஏற்றுகிறார். என்ன வளைவு நெளிவு. அருமையான ஸ்ட்ரக்சர், ஆனால் முகம் தான் வத்தலாக முற்றிப் போய் இருக்கிறது. வைரஸ் என்ற பட்டப்பெயருடன் வரும் சத்யராஜூக்கு மிக முக்கியமான கேரக்டர். எல்லாவற்றையும் ஸ் ஸ் என்று பேசுவது அழகு. விளையாட்டுக்காக வேலையாளிடம் ஸ்ரீகாந்துக்கும் ஜீவாவுக்கும் வேலை கிடைத்தால் என் மீசையை எடுத்து விடு என்று விளையாட்டுக்கு சொல்ல அவர்களுக்கு வேலை கிடைத்ததும் அவர் மீசையை எடுத்து விட இவர் குதிப்பது சூப்பர் காமெடி.

தஞ்சை குமணன்

19 comments:

இணையத்தில் நீங்களும் சம்பாரிக்கலாம் said...

முதலீடு இல்லாமல் உங்களாலும் இணயத்தில் சம்பாரிக்க முடியும். இந்த தளம் கடந்த 4 வருடங்களாக மிக சிறப்பாக செயல்பட்டு வருகிறது. இது 100 சதவீதம் உண்மை. பணம் பெற்றதற்க்கான Proof உள்ளது.

http://www.bestaffiliatejobs.blogspot.com/2011/12/get-paid-every-30-seconds.html

kannu said...

evvalavu kasu vanguna mamu super hit nu solra
makkal theerppu than mahesan theerpu.

மோகன் குமார் said...

தம்பி தஞ்சாவூர் காரர்னு வேற சொல்றீங்க; காப்பி அடிச்சு ஊர் பேரை நாசம் பண்ணாதீங்க. சொந்தமா எழுத பாருங்க

தஞ்சை குமணன் said...

/// மோகன் குமார் said...
தம்பி தஞ்சாவூர் காரர்னு வேற சொல்றீங்க; காப்பி அடிச்சு ஊர் பேரை நாசம் பண்ணாதீங்க. சொந்தமா எழுத பாருங்க ///

திரு. மோகன் குமார், தப்பா நினைச்சிங்காதீங்க, இதில் ஒரு சூட்சமம் இருக்கு, நாளை காலை அது அவிழ்க்கப்படும்.

குடந்தை அன்புமணி said...

/// மோகன் குமார் said...
தம்பி தஞ்சாவூர் காரர்னு வேற சொல்றீங்க; காப்பி அடிச்சு ஊர் பேரை நாசம் பண்ணாதீங்க. சொந்தமா எழுத பாருங்க ///

திரு. மோகன் குமார், தப்பா நினைச்சிங்காதீங்க, இதில் ஒரு சூட்சமம் இருக்கு, நாளை காலை அது அவிழ்க்கப்படும்.//

அட... இதுவேறயா....

தஞ்சை குமணன் said...

/// குடந்தை அன்புமணி said...
/// மோகன் குமார் said...
தம்பி தஞ்சாவூர் காரர்னு வேற சொல்றீங்க; காப்பி அடிச்சு ஊர் பேரை நாசம் பண்ணாதீங்க. சொந்தமா எழுத பாருங்க ///

திரு. மோகன் குமார், தப்பா நினைச்சிங்காதீங்க, இதில் ஒரு சூட்சமம் இருக்கு, நாளை காலை அது அவிழ்க்கப்படும்.//

அட... இதுவேறயா... ///

அட ஆமாங்கண்ணா.

KANA VARO said...

All is well kumanan

தஞ்சை குமணன் said...

/// KANA VARO said...
All is well kumanan ///

thankyou Kana varo

சி.பிரேம் குமார் said...

இந்த விமர்சனத்த எங்கயோ படிச்சா மாதிரி இருக்கே

Saha said...

Nalla irukkungannnnnaa!!!!!!!!!

Saha said...

nalllaaa thaaan irukku nambunga 3 idiots n tamil version

black said...

semaya iruku

vivek said...

nice work....ALL IS WELL....

தஞ்சை குமணன் said...

///vivek said...
nice work....ALL IS WELL....///
All is well makkal theerppu than mahesan theerpu.

தஞ்சை குமணன் said...

///black said...
semaya iruku///
appa super hit nu solra

தஞ்சை குமணன் said...

///Saha said...
nalllaaa thaaan irukku nambunga 3 idiots n tamil version///
இணையதளத்தில் மேலும் பல பதிவுகள் உள்ளது அட ஆமாங்கண்ணா..

sharbu007 said...

All is well அட ஆமாங்கண்ணா..

sankar said...

நண்பன் விமர்சனம் இதில் சூட்சமம் அருமையாக உள்ளது.

karthik87 said...

வெற்றி பெற வைக்கிறார்.

Post a Comment