Followers

Wednesday, 29 February 2012

இளையராஜாவின் இசையில் நீ தானே என் பொன் வசந்தம்

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் படம் 'நீதானே என் பொன்வசந்தம்'. ஜீவா, சமந்தா, சந்தானம் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்திற்கு தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார் கெளதம்.

கெளதம் மேனன் படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்.  முதன் முறையாக 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் பாடல்களுக்கு இளையராஜாவோடு கைகோர்த்து இருக்கிறார் கெளதம் மேனன்.

காதலர் தினத்தன்று இப்படத்தின் FIRST LOOK, YOUTUBE இணையத்தில் வெளியிட்டார்கள். படத்தின் பாடல்களுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இளையராஜா.

இந்நிலையில் பாடல்கள் குறித்து கெளதம் மேனன் தனது டிவிட்டர் இணையத்தில் " 'நீதானே என் பொன்வசந்தம் படத்தின் தமிழ்  மற்றும் தெலுங்கு பதிப்பில் இளையராஜா, யுவன், கார்த்திக் பாடியுள்ளார்கள். அதைப் பார்ப்பதே பெரும் ஆனந்தமாக இருந்தது. நேற்று இளையராஜா தன் குரலில் ஒரு பாடல் பதிவு செய்தார். " என்று தெரிவித்துள்ளார்.

இளையராஜா இப்படத்தின்  இசைக்காக ஹாங்கேரி நாட்டிற்கு சென்று பதிவு செய்ய உள்ளார்.

தஞ்சை குமணன்

Wednesday, 8 February 2012

ரஜினியின் ராணா தான் கோச்சடையானாக உருமாறுகிறதோ?


ரஜினி நடிக்க இருக்கும் படம் ' கோச்சடையான்' . தீபிகா படுகோன், சரத்குமார், சிநேகா, நாசர், ஆதி, ஷோபனா, ஜாக்கி ஷெரப் உள்ளிட்டோர் இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். EROS நிறுவனம் MEDIA ONE நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இருக்கிறது.

கோச்சடையான் படம் ஆரம்பிக்கும் போதே ' ராணா ' படம் கைவிடப்பட்டதா என்ற கேள்விக்கு, ' கோச்சடையான் ' படம் முடிவடைந்த பின் 'ராணா' படத்தில் ரஜினி நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ' கோச்சடையான் ' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தவர்களை பார்க்கும் போது ரசிகர்களுக்கு பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

'ராணா' படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டு,  அந்த படபூஜையில் கலந்து கொண்டார். அவரையே ' கோச்சடையான் ' நாயகியாக ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். சரத்குமார், சிநேகா இருவருமே ' ராணா ' படத்திற்கு ஒப்பந்தம் செய்தார்கள். தற்போது இருவரையும் ' கோச்சடையான் ' படத்திற்கும் ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.

'ராணா' படத்திற்காக கொடுக்கப்பட்ட சம்பளத்தை அப்படியே ' கோச்சடையான் ' படத்திற்காக மாற்றி இருக்கிறார்களாம். தீபிகா படுகோன், சரத்குமார், சிநேகா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் அனைவருமே ' ராணா ' படத்திற்காக கொடுக்கப்பட்ட தேதிகளை தான் ' கோச்சடையான் ' படத்திற்காக ஒதுக்கி கொடுத்து இருக்கிறார்கள்.

செளந்தர்யா ரஜினிகாந்த் 'சுல்தான், தி வாரியர்' என்ற ஒரு அனிமேஷன் படத்தினை நீண்ட காலமாக இயக்கி வந்தார். அப்படமும் கைவிடப்பட்டதாம். ' சுல்தான். தி வாரியர்', 'ராணா' இரு படங்களும் இணைந்ததே ' கோச்சடையான் ' என்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.

சுல்தானோ, ராணாவோ, கோச்சடையானோ  என்ன படமாக இருந்தாலும் ரஜினியை எப்போது திரையில் காண்பது என்று ஏங்கி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.


தஞ்சை குமணன்

Sunday, 5 February 2012

என்னவளே


உன் கண்களை பார்த்த முதல் நிமிடம்
காதலின் முதல்வரி தொடங்கியது!

எனது உயிரின் முகவரி
பெண்னே உன்னிடம் மாறியது!

உன் முகம் பார்க்கும் ஒவ்வொரு நாளும்
எனக்கு திபாவளி!

அன்பே உன் குறல்கேட்டால் போதும்
அதுதான் இங்கே கீதாஞ்சலி!

நீ எதிர்வரும் சமயம்
புன்னகையாலே எனது முகத்தை அலங்கரிப்பேன்!

கடந்துபோனதும் கவலையினாலே
கண்கலிரண்டிலும் நீர் வடிப்பேன்!

பாடும் குயிலுக்கு
உன் பாதகொலுசுகள் பள்ளிக்கூடம்!
நீ தாவணி லாக்கரில் பூட்டியத் தங்கம்
நானே உன்னை களவாட வந்த சி்ங்கம்!

என்னை போல பயலுக்கு
கண்னே உந்தன் ஞாபகந்தான்
கவிதை எழுத தோனுச்சு!

உன் தாணித் தலைப்புக்கு
எழுதிய கவிதையை நோபல் பரிசுக்கு
அனுப்பிவைப்பேன்!
உயிரை தடவி உனது பெயரை
உதடுகளாளே உச்சரிப்பேன்!

இடைவிடாமல் உன் முகம் பார்க்க
என் இமைகளைக் கூட கத்திரிப்பேன்!

உன் காலடி சுவடுகள் கலைந்தாலும்
இந்த காதலன் இதயம் தாங்காது!

நீ ஒரு நொடி நேரம் பிரிந்தாலும்


இந்த உயிர் கடிகாரம் ஓடாது!.......

தஞ்சை குமணன்


நான் மட்டும் தானா?

பொதுத்துறை வங்கியில் நான் கணக்குகள் தணிக்கை செய்யும் பணியில் இருப்பது தாங்கள் அனைவரும் முன்பே அறிந்ததே தினம் தினம் பல பல எண்ணங்களும் கற்பனைகளும் சிந்தனைகளும் ஒன்றுக்கும் குறைச்சல் இல்லை அவற்றையும் மீறி நான் அங்கு ஆர்வமுடன் பணியாற்றி வருகிறேன். 

அலுவலகத்தில் எனது அருமை நண்பர்கள் பற்றி இந்த கட்டுரையில் சொல்லியே ஆகவேண்டியுள்ளது. முதலில் எனது தந்தைக்கு மிக்க நன்றி அவரால் தான் இப்பணி எனக்கு கிட்டியது அவரே எனது முதல் சிறந்த நண்பர் மற்ற அனைத்து அலுவலக நண்பர்களயும் என்னால் ஒன்று இரண்டு என்று என்னால் வரிசைப்படுத்த முடியவில்லை முன்கோபி மோடுமுட்டி பொன்ற சூழ்நிலை உணராத பிடிவாத குணாதிசயம் கொண்ட இவர்களுடன் நான் அங்கு அடிக்கும் கலாட்டா கூத்துக்கள் அனைத்தும் அன்றைய பணிக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் எங்களது கூத்தும் கும்மாளமும் இருக்கும்.

பணியி்ன் இடையே கிடைக்கும் காபி தேனீர் மிக மிக அருமையாக இருக்கும். அதற்கென நாங்க‌ள் நேரம் ஒதுக்கி  ருசிப்போம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொவொருவர் செலவு செய்வர். எங்க‌ளது குழுவில் நாங்களே முடிவு செய்து கொள்வோம், எங்களது குழுவில் இரண்டு திரமையான ஆசிரியர்கள் வேறு எங்களுக்கு உள்ளனர் அவர்களுக்கு அருகில் நானே அதிக வயதுள்ளவன். மற்றவர்கள் என்னை விட வயதில் சிறியவர்கள். 

ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. அதற்காகவே நான் அவர்களுடன் விரும்பி பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். 

தஞ்சை குமணன். 

Saturday, 4 February 2012

மான் நடிகை கொலை குற்றத்தில் கைதுஔவையார் நூல்கள்:
2. கொன்றை வேந்தன்

கடவுள் வாழ்த்து
கொன்றை வேந்தன் செல்வன் அடியினை
என்றும் ஏத்தித் தொழுவோம் யாமே.

உயிர் வருக்கம்
1. அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்.
2. ஆலயம் தொழுவது சாலவும் நன்று.
3. இல்லறம் அல்லது நல்லறம் அன்று.
4. ஈயார் தேட்டை தீயார் கொள்வர்.
5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.
6. ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
7. எண்ணும் எழுத்தும் கண் எனத் தகும்.
8. ஏவா மக்கள் மூவா மருந்து.
9. ஐயம் புகினும் செய்வன செய்.
10. ஒருவனைப் பற்றி ஒரகத்து இரு.
11. ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்.
12. ஔவியம் பேசுதல் ஆக்கத்திற்கு அழிவு.
13. அ·கமும் காசும் சிக்கெனத் தேடு.

ககர வருக்கம்
14. கற்பெனப்படுவது சொல் திறம்பாமை.
15. காவல்தானே பாவையர்க்கு அழகு.
16. கிட்டாதாயின் வெட்டென மற.
17. கீழோர் ஆயினும் தாழ உரை.
18. குற்றம் பார்க்கில் சுற்றம் இல்லை.
19. கூர் அம்பு ஆயினும் வீரியம் பேசேல்.
20. கெடுவது செய்யின் விடுவது கருமம்.
21. கேட்டில் உறுதி கூட்டும் உடைமை.
22. கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி.
23. கொற்றவன் அறிதல் உற்ற இடத்து உதவி.
24. கோள் செவிக் குறளை காற்றுடன் நெருப்பு.
25. கௌவை சொல்லின் எவ்வருக்கும் பகை.

சகர வருக்கம்
26. சந்நதிக்கு அழகு வந்தி செய்யாமை.
27. சான்றோர் என்கை ஈன்றோர்க்கு அழகு.
28. சினத்தைப் பேணின் தவத்திற்கு அழகு.
29. சீரைத் தேடின் ஏரைத் தேடு.
30. சுற்றத்திற்கு அழகு சூழ இருத்தல்.
31. சூதும் வாதும் வேதனை செய்யும்.
32. செய்தவம் மறந்தால் கைதவம் ஆளும்.
33. சேமம் புகினும் யாமத்து உறங்கு.
34. சை ஒத்து இருந்தால் ஐயம் இட்டு உண்.
35. சொக்கர் என்பவர் அத்தம் பெறுவர்.
36. சோம்பர் என்பவர் தேம்பித் திரிவர்.

தகர வருக்கம்
37. தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை.
38. தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை.
39. திரைகடல் ஓடியும் திரவியம் தேடு.
40. தீராக் கோபம் போராய் முடியும்.
41. துடியாப் பெண்டிர் மடியில் நெருப்பு.
42. தூற்றும் பெண்டிர் கூற்று எனத் தகும்.
43. தெய்வம் சீறின் கைத்தவம் மாளும்.
44. தேடாது அழிக்கின் பாடாய் முடியும்.
45. தையும் மாசியும் வையகத்து உறங்கு.
46. தொழுதூண் சுவையின் உழுதூண் இனிது.
47. தோழனோடும் ஏழைமை பேசேல்.

நகர வருக்கம்
48. நல்லிணக்கம் அல்லல் படுத்தும்.
49. நாடெங்கும் வாழக் கேடொன்றும் இல்லை.
50. நிற்கக் கற்றல் சொல் திறம்பாமை.
51. நீரகம் பொருந்திய ஊரகத்து இரு.
52. நுண்ணிய கருமமும் எண்ணித் துணி.
53. நூல்முறை தெரிந்து சீலத்து ஒழுகு.
54. நெஞ்சை ஒளித்து ஒரு வஞ்சகம் இல்லை.
55. நேரா நோன்பு சீராகாது.
56. நைபவர் எனினும் நொய்ய உரையேல்.
57. நொய்யவர் என்பவர் வெய்யவர் ஆவர்.
58. நோன்பு என்பதுவே (? என்பது) கொன்று தின்னாமை.

பகர வருக்கம்
59. பண்ணிய பயிரில் புண்ணியம் தெரியும்.
60. பாலோடு ஆயினும் காலம் அறிந்து உண்.
61. பிறன் மனை புகாமை அறம் எனத் தகும்.
62. பீரம் பேணி பாரம் தாங்கும்.
63. புலையும் கொலையும் களவும் தவிர்.
64. பூரியோர்க்கு இல்லை சீரிய ஒழுக்கம்.
65. பெற்றோர்க்கு இல்லை சுற்றமும் சினமும்.
66. பேதைமை என்பது மாதர்க்கு அணிகலம்.
67. பையச் சென்றால் வையம் தாங்கும்.
68. பொல்லாங்கு என்பவை எல்லாம் தவிர்.
69. போனகம் என்பது தான் உழந்து உண்டல்.

மகர வருக்கம்
70. மருந்தே ஆயினும் விருந்தோடு உண்.
71. மாரி அல்லது காரியம் இல்லை.
72. மின்னுக்கு எல்லாம் பின்னுக்கு மழை.
73. மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
74. முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்.
75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்.
76. மெத்தையில் படுத்தல் நித்திரைக்கு அழகு.
77. மேழிச் செல்வம் கோழை படாது.
78. மை விழியார் தம் மனையகன்று ஒழுகு.
79. மொழிவது மறுக்கின் அழிவது கருமம்.
80. மோனம் என்பது ஞான வரம்பு.

வகர வருக்கம்
81. வளவன் ஆயினும் அளவறிந்து அழித்து உண்.
82. வானம் சுருங்கின் தானம் சுருங்கும்.
83. விருந்திலோர்க்கு இல்லை பொருந்திய ஒழுக்கம்.
84. வீரன் கேண்மை கூரம்பு ஆகும்.
85. உரவோர் என்கை இரவாது இருத்தல்.
86. ஊக்கம் உடைமை ஆக்கத்திற்கு அழகு.
87. வெள்ளைக்கு இல்லை கள்ளச் சிந்தை.
88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை.
89. வைகல் தோறும் தெய்வம் தொழு.
90. ஒத்த இடத்து நித்திரை கொள்.
91. ஓதாதார்க்கு இல்லை உணர்வொடும் ஒழுக்கம்.

தஞ்சை குமணன்


டிஸ்கி : எல்லாரும் அவ்வையாரின் கொன்றை வேந்தன் என்ற நூல் படிச்சீங்களா, நாளை சந்திப்போமா, ஜொள்ளு விடாம படிங்க தம்பி.Friday, 3 February 2012

தி.மு.க பொதுக்குழுவில் ஸ்டாலின் - அழகிரி குழுவினரிடையே மோதல்


சென்னையில் நேற்று நடந்த தி.மு.க., பொதுக்குழுவில், அழகிரி-ஸ்டாலின் ஆதரவாளர் களிடையே திடீர் மோதல் வெடித்தது. எதிர்பாராத இந்த ரகளையால், அக்கட்சித் தலைவர் கருணாநிதி கடும் வேதனையடைந்தார். அறிவாலயத்தில் தி.மு.க., பொதுக்குழு நேற்று கூடியது. தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்ட பிறகு, கட்சிப்பிரமுகர்கள் பேச அழைக்கப்பட்டனர். விவாதம், இரண்டாவது கட்டமாக மாலை 4 மணிக்கும் தொடர்ந்தது. திண்டுக்கல் லியோனி, வழக்கறிஞர் ஜோதி மற்றும் திருச்சி சிவா உள்ளிட்டோர் பேசும் போது, லேசான பரபரப்பும், சலசலப்பும் ஏற்பட்டது. சேலம் மாவட்டச் செயலர் வீரபாண்டி ஆறுமுகம் பேசும் போது, பரபரப்பு உச்சத்தை அடைந்தது.

பொதுக்குழுவில் கலைஞர் பேசியது : தி.மு.க.,வில் இன்று ஒரு வேதனையான பழக்கம் ஏற்பட்டுள்ளது. ஒருவரை, "இவர் இன்னாருக்கு வேண்டப்பட்டவர், இவர் அவருடைய ஆள்' என அடையாளம் காட்டும் நிகழ்ச்சிகள் அரங்கேறிக் கொண்டிருக்கின்றன. தலைவர் ஆரோக்கியமாக இருந்து, நம்மை எல்லாம் வழி நடத்திக் கொண்டிருக்கும் நிலையில், இதுபோல் இன்னொருவரை தலைமைப்பதவிக்கு முன்னிறுத்துவது நல்லதல்ல. ஸ்டாலின், அழகிரி மட்டும்அல்ல, தலைவரின் குடும்பமே நமது இதயம் போன்றது தான். அந்தக் குடும்பத்தில் இருந்து யார் வந்தாலும், அவர்களை வரவேற்கத் தயாராக இருக்கிறோம். அதற்காக, தலைவர் முன்னிலையிலேயே, "இவர் தான் அடுத்த தலைவர்' என்றெல்லாம் பேசுவது உகந்ததல்ல. இவ்வாறு வீரபாண்டி ஆறுமுகம் பேசிக் கொண்டு இருந்தபோதே, பொதுக்குழுவில் அமர்ந்திருந்த கட்சியினர், அவருக்கு எதிராகவும், "தளபதி, தளபதி' என்றும் கோஷமிடத் துவங்கினர். அதற்கு எதிர் கோஷமும் எழுந்தது. பலர், மேடையை நோக்கி முன்னேறினர். இதனால், பொதுக்குழுவில் பெரும் கூச்சலும், குழப்பமும் நிலவியது. "இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன்' எனக் கூறிய ஆறுமுகம், தொடர்ந்து பேச முயன்றார். ஆனால், அவரை பேச விடாமல், கட்சிக்காரர்கள் கோஷமிட்டபடி இருந்தனர். மேடையில் இருந்த முன்னணித் தலைவர்களாலும், தொண்டர்களை அமைதிப்படுத்த முடியவில்லை.

இறுதியில் எழுந்த, கட்சியின் பொதுச் செயலர் அன்பழகன் பேசியதாவது: அடுத்த தலைவர் பற்றி பேச்சு எழுந்தபோது, "இது ஒன்றும் சங்கர மடம் அல்ல, வாரிசுகளை அறிவிப்பதற்கு. இது ஜனநாயக அமைப்பு. கட்சி கூடித்தான் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுக்கும்' என, ஏற்கனவே தலைவர் கூறியிருக்கிறார். நானும், தலைவரும் இல்லாத தருணங்களில் எல்லாம் கட்சியை ஸ்டாலின் தான் வழி நடத்தி வந்திருக்கிறார். இனிமேலும், அவர் தான் தலைவராக வேண்டும் என இருந்தால், அதை யார் தடுத்துவிட முடியும்? அதற்காக, இப்போதே இதுபோன்ற சர்ச்சைகள் எழுவதை தவிர்க்க வேண்டும். இவ்வாறு அன்பழகன் பேசிய பிறகே, ஒருவாறு அமைதி திரும்பியது. அடுத்ததாக, கட்சித் தலைவர் கருணாநிதியின் பக்கம் மைக் வைக்கப்பட்ட போது, "அடுத்த பொதுக்குழுக் கூட்டத்தில் பேசுகிறேன்' எனக் கூறி, மைக்கை திருப்பி விட்டு விட்டார். தொண்டர்கள் எழுந்து, பெருங்கூச்சலோடு வேண்டுகோள் விடுக்கவே, தொடர்ந்து அவர் பேசியதாவது: பெரியாரால், அண்ணாவால் பாராட்டுப் பெற்றவன் நான். தலைவர் பதவியில் நீடிக்க வேண்டும் என ஒருக்காலும் விரும்பியவனல்ல. பொதுக்குழுவில் விவாதத்துக்காக கொடுக்கப்பட்ட பொருள் தவிர, மற்றவை பற்றி பேசினால், அது பத்திரிகைகளுக்குத் தான் செய்தியாகப் பயன்படும். இவ்வாறு ஆரம்பித்து விரிவாக பேசிய முன்னாள் முதல்வர் கருணாநிதி, பேச்சின் இடையில் கண் கலங்கினார். பொதுக்குழு முடிந்து, நிருபர்களைச் சந்தித்த போது, "அடுத்த தலைவர் யார் என்பதைப் பற்றி கூட்டத்தில் எந்த விவாதமும் நடக்கவில்லை' என, திட்டவட்டமாக மறுத்தார்.

பொதுக்குழுவில் நடந்த துளிகள் 

* தி.மு.க., தலைவர் கருணாநிதியின் வீட்டில் இருந்து, அறிவாலயம் வரை, சாலையின் இரு புறமும் கட்சிக்கொடிகள், தோரணங்கள், குழல் விளக்குகள் பொருத்தப்பட்டிருந்தன.
* மதிய வேளையில், 2,500 பேருக்கு சைவ சமையல் தயாரித்து வழங்கப்பட்டது.
* காலையில், 24 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாலையில், சேது சமுத்திர திட்டத்தை வலியுறுத்தி ஒரு தீர்மானமும், பொதுக்குழு விளக்கக் கூட்டங்கள் நடத்துவது பற்றிய இன்னொரு தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.
* கூட்டம் நடந்த கலைஞர் அரங்கம் அருகே வரை செல்ல, காலையில் பத்திரிகையாளர்கள் அனுமதிக்கப்பட்டனர். மாலையில், கூட்டம் முடியும் வரை, அந்த கட்டடத்துக்கு உள்ளேயே அனுமதிக்கப்படவில்லை.
* கூட்டத்தில் பேசிய பலர், காங்கிரசுடனான கூட்டணியை முறிக்க வேண்டும் என வலியுறுத்தினர். அதற்கு, தொண்டர்கள் மத்தியில் பெரும் வரவேற்பும், கைதட்டலும் இருந்தது.
* திண்டுக்கல் லியோனி பேசுகையில், "மொபைல் போனும், கையுமாக கட்சியினர் நடந்து கொள்வதைப் பார்க்கும்போது, தி.மு.க., இன்னமும் ஆட்சியில் தான் இருக்கிறதோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது' என்றார்.
* "தேர்தலில், பணக்காரர்களுக்குத் தான் சீட் கொடுக்கப்படுகிறது' என, வழக்கறிஞர் ஜோதி பேசியபோது, பெரும் ஆதரவு அலை எழுந்தது. "நீ பார்த்தியா' என ஒருவர் சத்தம் போட, அவரைக் கண்டித்தும், ஜோதியை ஆதரித்தும் பெரும் கூச்சல் ஏற்பட்டது.
* "தி.மு.க.,வுக்கு இரண்டு சேனல்கள் இருக்கின்றன. பொதுமக்களின் கவனத்தை ஈர்க்க, கலைஞர் "டிவி'யைப் போலவே, அந்த இன்னொரு சேனலும் செயல்பட வேண்டும்' என, திருச்சி சிவா பேசியபோது எழுந்த கைதட்டல் அடங்க, நெடுநேரம் ஆனது.
* காலையில், பொதுக்குழு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு, கட்சியினர் பேச அழைக்கப்பட்ட உடன், மத்திய அமைச்சர் அழகிரி, அரங்கை விட்டு வெளியேறினார். மாலையில், நடந்த விவாதத்தில் அவர் பங்கேற்கவில்லை. 

நன்றி : காலை நாளிதழ் 

தஞ்சை குமணன்

Thursday, 2 February 2012

பிரபல நடிகை குடிபோதையில் கைதுகடவுள் வாழ்த்து
ஆத்தி சூடி அமர்ந்த தேவனை
ஏத்தி ஏத்தித் தொழுவோம் யாமே.


உயிர் வருக்கம்
1. அறம் செய விரும்பு.
2. ஆறுவது சினம்.
3. இயல்வது கரவேல்.
4. ஈவது விலக்கேல்.
5. உடையது விளம்பேல்.
6. ஊக்கமது கைவிடேல்.
7. எண் எழுத்து இகழேல்.
8. ஏற்பது இகழ்ச்சி.
9. ஐயம் இட்டு உண்.
10. ஒப்புரவு ஒழுகு.
11. ஓதுவது ஒழியேல்.
12. ஔவியம் பேசேல்.
13. அ·கம் சுருக்கேல்.

உயிர்மெய் வருக்கம்
14. கண்டொன்று சொல்லேல்.
15. ஙப் போல் வளை.
16. சனி நீராடு.
17. ஞயம்பட உரை.
18. இடம்பட வீடு எடேல்.
19. இணக்கம் அறிந்து இணங்கு.
20. தந்தை தாய்ப் பேண்.
21. நன்றி மறவேல்.
22. பருவத்தே பயிர் செய்.
23. மண் பறித்து உண்ணேல்.
24. இயல்பு அலாதன செய்யேல்.
25. அரவம் ஆட்டேல்.
26. இலவம் பஞ்சில் துயில்.
27. வஞ்சகம் பேசேல்.
28. அழகு அலாதன செய்யேல்.
29. இளமையில் கல்.
30. அரனை மறவேல்.
31. அனந்தல் ஆடேல்.

ககர வருக்கம்
32. கடிவது மற.
33. காப்பது விரதம்.
34. கிழமைப்பட வாழ்.
35. கீழ்மை அகற்று.
36. குணமது கைவிடேல்.
37. கூடிப் பிரியேல்.
38. கெடுப்பது ஒழி.
39. கேள்வி முயல்.
40. கைவினை கரவேல்.
41. கொள்ளை விரும்பேல்.
42. கோதாட்டு ஒழி.
43. கௌவை அகற்று.

சகர வருக்கம்
44. சக்கர நெறி நில்.
45. சான்றோர் இனத்து இரு.
46. சித்திரம் பேசேல்.
47. சீர்மை மறவேல்.
48. சுளிக்கச் சொல்லேல்.
49. சூது விரும்பேல்.
50. செய்வன திருந்தச் செய்.
51. சேரிடம் அறிந்து சேர்.
52. சையெனத் திரியேல்.
53. சொற் சோர்வு படேல்.
54. சோம்பித் திரியேல்.

தகர வருக்கம்
55. தக்கோன் எனத் திரி.
56. தானமது விரும்பு.
57. திருமாலுக்கு அடிமை செய்.
58. தீவினை அகற்று.
59. துன்பத்திற்கு இடம் கொடேல்.
60. தூக்கி வினை செய்.
61. தெய்வம் இகழேல்.
62. தேசத்தோடு ஒட்டி வாழ்.
63. தையல் சொல் கேளேல்.
64. தொன்மை மறவேல்.
65. தோற்பன தொடரேல்.

நகர வருக்கம்
66. நன்மை கடைப்பிடி.
67. நாடு ஒப்பன செய்.
68. நிலையில் பிரியேல்.
69. நீர் விளையாடேல்.
70. நுண்மை நுகரேல்.
71. நூல் பல கல்.
72. நெற்பயிர் விளைவு செய்.
73. நேர்பட ஒழுகு.
74. நைவினை நணுகேல்.
75. நொய்ய உரையேல்.
76. நோய்க்கு இடம் கொடேல்.

பகர வருக்கம்
77. பழிப்பன பகரேல்.
78. பாம்பொடு பழகேல்.
79. பிழைபடச் சொல்லேல்.
80. பீடு பெற நில்.
81. புகழ்ந்தாரைப் போற்றி வாழ்.
82. பூமி திருத்தி உண்.
83. பெரியாரைத் துணைக் கொள்.
84. பேதைமை அகற்று.
85. பையலோடு இணங்கேல்.
86. பொருள்தனைப் போற்றி வாழ்.
87. போர்த் தொழில் புரியேல்.

மகர வருக்கம்
88. மனம் தடுமாறேல்.
89. மாற்றானுக்கு இடம் கொடேல்.
90. மிகைபடச் சொல்லேல்.
91. மீதூண் விரும்பேல்.
92. முனைமுகத்து நில்லேல்.
93. மூர்க்கரோடு இணங்கேல்.
94. மெல்லி நல்லாள் தோள்சேர்.
95. மேன்மக்கள் சொல் கேள்.
96. மை விழியார் மனை அகல்.
97. மொழிவது அற மொழி.
98. மோகத்தை முனி.

வகர வருக்கம்
99. வல்லமை பேசேல்.
100. வாது முற்கூறேல்.
101. வித்தை விரும்பு.
102. வீடு பெற நில்.
103. உத்தமனாய் இரு.
104. ஊருடன் கூடி வாழ்.
105. வெட்டெனப் பேசேல்.
106. வேண்டி வினை செயேல்.
107. வைகறைத் துயில் எழு.
108. ஒன்னாரைத் தேறேல்.
109. ஓரம் சொல்லேல்.தஞ்சை குமணன்

டிஸ்கி : நானும் பலமுறை இது தான் தம்பி ஆத்திச்சூடி, நம் வாழ்க்கைக்கு மிகவும் அவசியமான ஒன்று, இதனை கடைபிடித்தால் நாம் ஒழுக்கமுடன் வாழ்வோம் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தேன். ஒருத்தனும் கேட்கிற மாதிரி தெரியல, அதான் இப்படி. தலைப்ப பார்த்து ஜொள்ளு விட்டு வந்தாலும் உள்ள வந்து வாழ்க்கைக்கு நல்ல விஷயத்தை கத்துகிட்டு போங்க.திருப்பதிக்கே லட்டா? தேமுதிகவுக்கே சவாலா? - விஜயகாந்த் கேள்வி


சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்தும், முதல்வர் ஜெ.,வும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் காரசார விவாதம் நடந்தது. இதில் தேர்தலில் தனித்து போட்டியிட திராணி இருக்கிறதா என்று ஜெ., எழுப்பினார். யார் கூட்டணியால் யார் ஜெயித்தார் என விவாதம் நடந்தது. சபையில் அநாகரிகமாக நடந்து கொண்டதையடுத்து சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உரிமை மீறல் குழு முன்பு ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் விஜயகாந்த் ஆஜராகவில்லை இதனையடுத்து விஜயகாந்த் சபையில் பங்கேற்க 10 நாள் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சபையில் நடந்தது என்ன என்பது குறித்தும், அ.தி.மு.க.,வுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை என்றும் அவர்கள்தான் என்னை அழைத்தார்கள் என்றும் தே.மு.தி.க., அலுவலகத்தில் இன்று மதியம் விஜயகாந்த், நிருபர்களிடம் கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில்: சபையில் நாங்கள் மக்கள் பிரச்சனைகளை பேசினோம். ஆனால் இதற்கு அனுமதி தரப்படவில்லை. கையை நீட்டி பேசியது தவறு என்றால் எல்லோரும் கை நீட்டி தான் பேசுகின்றனர். எங்களுடன் கூட்டணி வைத்தது அருவருப்பாக இருக்கிறதாம், ஏன் உங்களை பார்க்கவும் அருவருப்பாகத்தான் இருக்கிறது.

நாங்கள் பொறுமையாக இருக்கவில்லையா ? யாருக்கு ஏறுமுகம், இறங்கு முகம் என்று நீங்கள் சொல்லக்கூடாது மக்கள் சொல்ல வேண்டும். சபை நடவடிக்கைகள் அனைத்தையும் எடிட் செய்யாமல் ஒளிபரப்பிட தயாரா ? இடைத்தேர்தலில் ஆளும்கட்சி வெற்றிபெறும் என்பது நடந்திருக்கிறது. நியாயத்தை பற்றி இவர்கள் பேசுகிறார்கள். நான் கட்சியை துவக்கி 13 முறை இடைத்தேர்தலை சந்தித்தவன். நீங்கள் தான் அச்சப்படுகிறீர்கள். நான் தலை குனிந்தாலும் மக்கள் தலைகுனிய விட மாட்டேன். எம்.ஜி.ஆர்.,காலத்தில் இருந்து கூட்டணி வைத்துதான் வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள். ஊர் கூடி தேர் இழுத்தோம். இதனால் கூட்டணி சேர்ந்தோம். தொண்டர்கள் என்ன விரும்புகின்றார்களோ அதன்படிதான் நாங்கள் கூட்டு வைப்போம். 5 ஆண்டுகாலம் அரசியலில் இடைத்தேர்தல் நாயகன் (அழகிரி) நிலை என்னவாச்சு ? இப்போது அழகிரி எங்கே இருக்கிறார். சட்டம் ஒழுங்கு கெட்டு போச்சு: சட்டம் ஒழுங்கு கெட்டு போய் குட்டி சுவராக இருக்கிறது. தேவைப்பட்டால் நாங்கள் போராட்டம் நடத்துவோம். இப்போது தான் விஜயகாந்த் வந்திருக்கான் போகப்போக புரியும். ஜெயலலிதா திருந்தி விட்டார் என நிவைத்தேன் ஆனால் திருந்தவில்லை. இந்த அம்மா இன்னும் திருந்தவில்லை. ஆணவம் குறையவில்லை. மமதை போக்குடன் இருந்து வருகிறார். பழையகுருடி, கதவை திறடி என்ற கதையாகிப்போச்சு. நாளுக்கு நாள் ஒரு அமைச்சர் நீக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

ராஜினாமா செய்யத்தயார் : அ.தி.மு.க,.வுடன் கூட்டணி வைத்ததற்கு ராஜிவ் முதல் வாஜ்பாய் வரை கவலைப்பட்டனர். கேவலப்பட்ட அரசுக்கு மத்தியில் எங்களை உட்கார வைத்து விட்டார்களே என நாங்கள் இவர்களுடன் கூட்டணி வைத்தமைக்கு வெட்கப்படுகிறோம். வேதனைப்படுகிறோம். இன்றைக்கு மக்கள் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்து விட்டார்களோ அன்றைக்கு ஆட்சி சரியில்லை என்றுதான் அர்த்தம். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். நியாத்திற்காக போராடுவேன், என்னை மிரட்டி பணிய வைக்க நினைத்தால் அதுநடக்காது. பேசனுமின்னா நிறைய பேச வேண்டியது வரும். பேசக்கூடாது என இருக்கிறேன். தி.மு.க.,வும்,. அ.தி,மு.க.,வும் ஒழுங்கா ஆட்சி செய்திருந்தால் நாங்கள் ஏன் கட்சியை துவக்க வேண்டும் ? நாங்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிட தயார், நீங்கள் தயாரா, கவர்னர் ஆட்சியை கொண்டு வந்து தேர்தலை சந்திக்க தயாரா? என்னுடன் கூட்டணி வைக்க ஜெ., போட்ட டூர் எல்லாம் கேன்சல் பண்ணினார்கள். என்னுடைய சவாலை ஏற்க தயாரா? மதுரைக்கே மல்லிகை பூவா ? திருநெல்வேலிக்கே அல்வாவா, திருப்பதிக்கு லட்டா, தே.மு.தி.க.,வுக்கே சவாலா என்றார். அடுத்த தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்று நாங்கள் தான் ஆளும் கட்சியாக வருவோம் தொடர்ந்து கூட்டணி தர்மம் மீறிவிட்டதாக கூறப்படுகிதே என்று நிருபர்கள் கேட்டதற்கு கூட்டணி தர்மம் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது என்றார்.

தஞ்சை குமணன்