Followers

Thursday 2 February 2012

திருப்பதிக்கே லட்டா? தேமுதிகவுக்கே சவாலா? - விஜயகாந்த் கேள்வி


சட்டசபையில் எதிர்கட்சி தலைவர் விஜயகாந்தும், முதல்வர் ஜெ.,வும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதால் காரசார விவாதம் நடந்தது. இதில் தேர்தலில் தனித்து போட்டியிட திராணி இருக்கிறதா என்று ஜெ., எழுப்பினார். யார் கூட்டணியால் யார் ஜெயித்தார் என விவாதம் நடந்தது. சபையில் அநாகரிகமாக நடந்து கொண்டதையடுத்து சபையில் இருந்து வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து அவர் மீது உரிமை மீறல் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக உரிமை மீறல் குழு முன்பு ஆஜராக வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆனால் விஜயகாந்த் ஆஜராகவில்லை இதனையடுத்து விஜயகாந்த் சபையில் பங்கேற்க 10 நாள் தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் சபையில் நடந்தது என்ன என்பது குறித்தும், அ.தி.மு.க.,வுடன் நாங்கள் கூட்டணி வைக்கவில்லை என்றும் அவர்கள்தான் என்னை அழைத்தார்கள் என்றும் தே.மு.தி.க., அலுவலகத்தில் இன்று மதியம் விஜயகாந்த், நிருபர்களிடம் கூறினார். தொடர்ந்து அவர் பேசுகையில்: சபையில் நாங்கள் மக்கள் பிரச்சனைகளை பேசினோம். ஆனால் இதற்கு அனுமதி தரப்படவில்லை. கையை நீட்டி பேசியது தவறு என்றால் எல்லோரும் கை நீட்டி தான் பேசுகின்றனர். எங்களுடன் கூட்டணி வைத்தது அருவருப்பாக இருக்கிறதாம், ஏன் உங்களை பார்க்கவும் அருவருப்பாகத்தான் இருக்கிறது.

நாங்கள் பொறுமையாக இருக்கவில்லையா ? யாருக்கு ஏறுமுகம், இறங்கு முகம் என்று நீங்கள் சொல்லக்கூடாது மக்கள் சொல்ல வேண்டும். சபை நடவடிக்கைகள் அனைத்தையும் எடிட் செய்யாமல் ஒளிபரப்பிட தயாரா ? இடைத்தேர்தலில் ஆளும்கட்சி வெற்றிபெறும் என்பது நடந்திருக்கிறது. நியாயத்தை பற்றி இவர்கள் பேசுகிறார்கள். நான் கட்சியை துவக்கி 13 முறை இடைத்தேர்தலை சந்தித்தவன். நீங்கள் தான் அச்சப்படுகிறீர்கள். நான் தலை குனிந்தாலும் மக்கள் தலைகுனிய விட மாட்டேன். எம்.ஜி.ஆர்.,காலத்தில் இருந்து கூட்டணி வைத்துதான் வெற்றி பெற்று வந்திருக்கிறார்கள். ஊர் கூடி தேர் இழுத்தோம். இதனால் கூட்டணி சேர்ந்தோம். தொண்டர்கள் என்ன விரும்புகின்றார்களோ அதன்படிதான் நாங்கள் கூட்டு வைப்போம். 5 ஆண்டுகாலம் அரசியலில் இடைத்தேர்தல் நாயகன் (அழகிரி) நிலை என்னவாச்சு ? இப்போது அழகிரி எங்கே இருக்கிறார். சட்டம் ஒழுங்கு கெட்டு போச்சு: சட்டம் ஒழுங்கு கெட்டு போய் குட்டி சுவராக இருக்கிறது. தேவைப்பட்டால் நாங்கள் போராட்டம் நடத்துவோம். இப்போது தான் விஜயகாந்த் வந்திருக்கான் போகப்போக புரியும். ஜெயலலிதா திருந்தி விட்டார் என நிவைத்தேன் ஆனால் திருந்தவில்லை. இந்த அம்மா இன்னும் திருந்தவில்லை. ஆணவம் குறையவில்லை. மமதை போக்குடன் இருந்து வருகிறார். பழையகுருடி, கதவை திறடி என்ற கதையாகிப்போச்சு. நாளுக்கு நாள் ஒரு அமைச்சர் நீக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

ராஜினாமா செய்யத்தயார் : அ.தி.மு.க,.வுடன் கூட்டணி வைத்ததற்கு ராஜிவ் முதல் வாஜ்பாய் வரை கவலைப்பட்டனர். கேவலப்பட்ட அரசுக்கு மத்தியில் எங்களை உட்கார வைத்து விட்டார்களே என நாங்கள் இவர்களுடன் கூட்டணி வைத்தமைக்கு வெட்கப்படுகிறோம். வேதனைப்படுகிறோம். இன்றைக்கு மக்கள் வீதிக்கு வந்து போராட ஆரம்பித்து விட்டார்களோ அன்றைக்கு ஆட்சி சரியில்லை என்றுதான் அர்த்தம். நான் யாருக்கும் பயப்பட மாட்டேன். நியாத்திற்காக போராடுவேன், என்னை மிரட்டி பணிய வைக்க நினைத்தால் அதுநடக்காது. பேசனுமின்னா நிறைய பேச வேண்டியது வரும். பேசக்கூடாது என இருக்கிறேன். தி.மு.க.,வும்,. அ.தி,மு.க.,வும் ஒழுங்கா ஆட்சி செய்திருந்தால் நாங்கள் ஏன் கட்சியை துவக்க வேண்டும் ? நாங்கள் அனைவரும் பதவியை ராஜினாமா செய்து விட்டு தேர்தலில் போட்டியிட தயார், நீங்கள் தயாரா, கவர்னர் ஆட்சியை கொண்டு வந்து தேர்தலை சந்திக்க தயாரா? என்னுடன் கூட்டணி வைக்க ஜெ., போட்ட டூர் எல்லாம் கேன்சல் பண்ணினார்கள். என்னுடைய சவாலை ஏற்க தயாரா? மதுரைக்கே மல்லிகை பூவா ? திருநெல்வேலிக்கே அல்வாவா, திருப்பதிக்கு லட்டா, தே.மு.தி.க.,வுக்கே சவாலா என்றார். அடுத்த தேர்தலில் அமோகமாக வெற்றி பெற்று நாங்கள் தான் ஆளும் கட்சியாக வருவோம் தொடர்ந்து கூட்டணி தர்மம் மீறிவிட்டதாக கூறப்படுகிதே என்று நிருபர்கள் கேட்டதற்கு கூட்டணி தர்மம் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது என்றார்.

தஞ்சை குமணன்


4 comments:

sharbu007 said...

திருநெல்வேலிக்கே அல்வாவா

sankar said...

திருப்பதிக்கே லட்டா அமோக வெற்றி

karthik87 said...

நாங்கள் பொறுமையாக இருக்கவில்லையா ?

அக் ஷயா said...

இந்த கொலைவெறி ஏன் இருக்கிறது..

Post a Comment