Followers

Tuesday, 31 January 2012

குயில்களின் குரலும் இசையும்ஜானகியம்மா தேனிசை வளம் எவருக்கும் கிடைக்குமா?...

சித்ராம்மா குரலின் இனிமை இனியும் யாருக்கு கிட்டும்?...

சுசீலா அம்மா குரல் போல மருபடி கிடைக்குமா?...

லதாமங்கேஷ்கரின் குயில் குரல் இனியும் கிடைக்குமா?...

சொர்ணலதா குரலின் வனப்பு யாருக்கு வரும்?...

ஜிக்கியம்மாவின் குரலில் உள்ள குழந்தைதனம் வேறதிலும் பார்க்க முடியாது!...

அனுராதா ச்ரிராம் பாடல்கள் திரும்பத்திரும்ப கேட்க தூண்டுமே!...

எம் எஸ் விஸ்வநாதன் இசையை யாருலும் கேட்காமலிருக்க முடியாது!...

இளையராஜாவின் இசைக்கு ஈடு இணை இல்லை!...

சங்கர்கணேஷின் இசை போன்ற மதுர இசை கிடைப்பதில்லை!...

டிராஜேந்திரர் பல்திறன் இசை வேறு யாரலும் கொடுக்க முடியாது!...

ஏஆர் ரஹ்மானின் இசையை மிஞ்சுவதர்க்கு ஆளில்லை!...

ஹாரிஸ்ஜெயராஜ் இசைக்காக காத்துக்கொன்டிருக்கும் மக்கள் உண்டு!...

தரணியின் இசையை தொடர்ந்து கேட்பவர்களும் இருக்கிறார்கள்?...

சிற்பியின் இசையில் மனம் கதிகலங்கும்?...

இவ்வாறான கலைஞர்களின் படைப்புகளை திரும்பத்திரும்ப கேட்க தூண்டுகிறதே நம் மனம்!

தஞ்சை குமணன்

Saturday, 28 January 2012

அமிதாப் - ரஜினி இணைந்து நடிக்கிறார்கள்


அமிதாப் பச்சன், ரஜினி இருவரும் இறுதியாக சேர்ந்து நடித்த படம் அந்தா கானூன்.  இப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. எனக்கு மிகவும் பிடித்த படம் அது. ஐந்து முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். மறுபடியும் இருவரும் சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தினை இயக்க இருக்கிறார் பூரி ஜெகன்நாத். 

இது குறித்து அவர் கூறியிருப்பது " சமீபத்தில் ரஜினி சாரை சந்தித்துப் பேசியபோது, நான் அமிதாப் பச்சனை வைத்து இயக்க போகும் படம் குறித்து பேசினேன். அப்புதிய படத்தில் நீங்களும் இடம் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். ரஜினி சார் அவ்வேண்டுகோளை ஏற்றுக்  கொண்டார். அமிதாப் பச்சனுடன் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து அவர் சந்தோஷம் தெரிவித்தார். நீண்ட காலமாகவே ரஜினி சாரை இயக்க வேண்டும் என்பது எனது ஆசை. இப்போது அந்த ஆசை நிறைவேறியுள்ளது.  அதேசமயம், இரு பெரும் ஸ்டார்களான அமிதாப் மற்றும் ரஜினியை இணைத்து இயக்கப் போவது எனக்கே மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.

அமிதாப் நாயகனாக நடித்த 'Buddah Hoga Tera Baap' என்ற படத்தை இயக்கியவர் பூரி ஜெகன்நாத் என்பது குறிப்பிடத்தக்கது. நாமும் இருவரும் இணைந்து நடித்து வெளிவரும் அந்த நாளை எதிர் பார்த்து காத்திருப்போம்.

தஞ்சை குமணன்


Thursday, 26 January 2012

வலையுலகில் அக்கப்போர் உருவாக்கும் பதிவர்

இந்த பதிவுலகில் தமிழ்நாடு தமிழர்கள் - ஈழத்தமிழர்கள் போர் வரப் போகிறதாம், துவக்கப் போகிறது யோசனை பெல் என்ற சாக்கடைப் பதிவராம். நேற்று முதல் தமிழ் பதிவுலகில் ஒரே ரணகளம் ஏற்படுத்தும் என்று நம்பி போட்ட போஸ்ட் தமிழ்நாட்டில் உள்ள பதிவர்களால் சீண்டப்படாமல் கிடக்கிறது. வலையுலகிலேயே ஒரு பதிவில் பின்னூட்டமிட்டால் அது நம் மேலேயே தெறிக்கும் அளவுக்கு அதில் சாக்கடை நிரம்பிக் கிடக்கிறது என்றால் அந்த யோசனை பெல் பதிவில் தான்.

நாமெல்லாம் நல்ல பதிவர்களை சந்தித்தே பழக்கப்பட்டவர்கள், இது போன்ற கழிசடையை நாம் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். தமிழ்மணத்தில் ஏற்பட்ட பதிவர் - தமிழ்மணம் மோதலில் பதிவர்கள் சணடையை முடித்து விட்டு நாகரீகமாக ஒதுங்கிப் போக தமிழ்மணத்தில் நம் பதிவுலக நண்பர்கள் விட்ட இடத்தை பிடித்து விட வேண்டுமென்பதற்காக தரம் கெட்ட காரியங்களில் ஈடுபட்ட கருங்காலி இவர். எழவு வீட்டில் திருடும் முறையை விட கேவலமானது இவர் நடந்து கொண்ட முறை. ஈழத் தமிழர்களில் எவ்வளவோ நல்ல பதிவர்கள் நாகரீகமான முறையில் எழுதிக் கொண்டிருக்க அவர்களது அத்தனைப் பேரின் நன்மதிப்பை ஈழத்தமிழன் என்ற போர்வையில் கெடுத்துக் கொண்டிருப்பவர்.

நிருபருக்கும் - நாய் நக்ஸூக்கும், ஆபீசருக்கும் பதிவுலகில் பிரச்சனை என்றால் அவர்கள் தீர்த்துக் கொள்கிறார்கள். அதைவிடுத்து நிருபர் ஏதோ ஆதரவில்லாமல் நிற்பது போலவும் இந்த சாக்கடை வந்து காப்பாறுவதாகவும் நினைத்துக் கொண்டு நிருபரை இன்னும் சிலபடிகள் கீழிறக்க உதவி செய்து கொண்டிருக்கிறது. அனைத்து பதிவர்களும் இவரைப் பார்த்து ஒதுங்கிப் போனால் இவரைப் பார்த்து அனைவரும் பயந்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கின்றார். ஆனால் விலகிப் போனவர்களுக்குத் தான் தெரியும் சாக்கடையில் கல்லை விட்டெறிந்தால் சகதி நம் மேல் தான் படும் என்று.

எனக்கு தெரிந்த வரையில் வீடு சுரேஸ் மிக மிக கண்ணியமான ஆள். மற்றவர்களுக்கு மரியாதையும் கெளரவமும் கொடுக்க வேண்டும் என்று நினைப்பவர். நான் இதற்கு முன் ஒரு பதிவரை பற்றி போட்டிருந்த பதிவில் கூட தனி மனித தாக்குதல் கூடாது என்று என்னை எச்சரித்தவர். அவரைக்கூட போலி பெயர்களில் வந்து கலாய்க்கும் நீங்கள் உண்மையில் கேவலமானவர் தான்.

சொந்தப் பெயரையோ தனது சொந்த புகைப்படத்தையோ தனது பதிவில் வைத்துக் கொள்ளக்கூட தைரியமில்லாத ஆள் இவர். தமிழ்நாட்டில் இதுவரை முஸ்லீம் பதிவர்களும் மற்ற தமிழ்ப்பதிவர்களும் ஒன்றாகவே பழகி வருகிறார்கள். இவர்கள் தமிழ்மணத்தில் முதலிடமும் இரண்டாமிடமும் பெற வேண்டுமென்பதற்காக கலகத்தை தூண்டியவன் இவரே. இவர் போருக்கு கூப்பிடுவாராம், அனைத்து ஈழப்பதிவர்களும் இவருக்கு ஆதரவாக களத்தில் இறங்கி போரிவார்களாம். என்னா நினைப்புங்க உங்களுக்கு. நீங்களும் உங்க கூட இரண்டு பதிவர்களும் அவர்களின் 20 புனைப்பெயர்களுடன் கூடிய ஐடியும் இருந்து வரிசையாக பின்னூட்டத்தில் கலாய்த்தால் எல்லா ஈழப்பதிவர்களும் இந்திய தமிழ்ப்பதிவர்களை எதிர்ப்பதாக அர்த்தமாகிவிடுமா. ஒரே நகைச்சுவையாக இருக்குது போங்கள்.

இத்தனைப் பதிவர்களில் உங்கள் ஒருவரைப் பார்த்து மற்றவர்கள் ஒதுங்கிப் போகிறார்கள் என்றால் நீங்கள் எவ்வளவு அசிங்கமானவர் என்பதை உணர்ந்துக் கொள்ளுங்கள்.நான் சொல்லி நீங்கள் கேட்கப் போவதுமில்லை. இத்தனை நாட்களும் ஈழத்தமிழர்கள் என்றால் போராடும் வீரர்கள், நேர்மையானவர்கள் என்று எங்களை விட மிக உயர்ந்த ஸ்தானத்தில் என்னைப் போன்றவர்கள் வைத்திருந்தனர். உங்களை பதிவில் சந்தித்த பிறகு எல்லோருக்கும் அந்த எண்ணத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும் என்ற எண்ணம் தோன்றியிருப்பதில் உங்கள் பங்குதான் அதிகம் என்பதை நினைத்துக்
கொள்ளுங்கள். உங்களால் ஈழத்தமிழர்களுக்கு கிடைத்த புகழ் இது தான். உங்களால் இந்த பதிவின் பின்னூட்டத்தில் வந்து கேவலமான விளக்கம் கொடுக்க முடியும், இல்லையென்றால் நாய் சேகர் புதிய புரட்சிக்காரன் மற்றும் பல பெயர்களி்ல் தரக்குறைவான பின்னூட்டங்களை இட முடியும். அவ்வளவு தானே. அது என் தரத்தை குறைக்காது என்பதை மட்டும் நினைவில் கொள்ளுங்கள்.

நானெல்லாம் எந்தசண்டைக்கும் வம்புக்கும் போகாதவன், மரியாதையான நிறுவனத்தில் கெளரவமான பணியிலிருப்பவன். இது போன்ற தரம் குறைந்த பதிவு இட தூண்டுபவர் நீங்கள் தான் என்பதை வருத்ததுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

தஞ்சை குமணன்

Wednesday, 25 January 2012

நானும் காதலித்தேன்!<@{#$`%‍=,.}"/;'[:/]^~&*‍‍>(*)? நானும் காதலித்தேன் !<@#$`%‍=,."/;'[:/]{^~&*>}(*)?

எனது கனாவில்.............................

அவளது கண்களை.............................

அவற்றின் இயக்கங்க‌ள்
என‌க்கும் பிடிக்கும்.............................

அன்பு அனுமதி அறிவு அயர்ச்சி அலர்ஜி ஆர்பரிப்பு அமைதி அருவருப்பு அவலட்சினம் ஆக்ரோஷம்.............................

கருணை கனிவு கோபம் காதல் கசப்பு கட்டுப்பாடு குரொதம் காமம் கிண்டல் கண்டுபிடிப்பு கேலி களவு கனா.............................

பரிவு பகிர்வு பாசம் புகுத்துதல் பிடிவாதம் பேச்சு பொல்லாஙுகு பித்தம் பங்கிடு பாசாங்கு பசப்பு.............................

இரக்கம் இயக்கம் இம்சை இருக்கம் இரும்பூது இயற்கை இசைவு இயல்பு இருமாப்பு இச்சை இனிமை............................

உரக்கம் உபசரனை உபஹாரம் உபத்ரவம் உச்ச‌ரிப்பு உனர்வு உருவம் உருவகம் உத்வெகம் உர்ச்சாகம்.............................

சோர்வு சொல்வன்மை சோம்பல் சத்தியம் சாதுர்யம் சமத்துவம் சகிப்பு சண்டிதனம் சுறுசுறுப்பு.............................

தயக்கம் துணிவு தாய்மை துரோகம் தைரியம் தளர்வு திருத்தம் தோரனை.............................

 விறுவிறுப்பு வரவேற்பு விருப்பு விசும்பல் விருப்பம்.............................


அப்புறம் தான் புரிந்தது!.............................
பலரசங்க‌ளை 
அவள் இதழ் மட்டுமல்லாது
அவள் விழியும் பேச 
கற்றுகொண்டிருந்தன.............................
அதைபார்த்ததுமே 
அவளைப் போல 
மற்றவர்களையும் என்னால்
நினைக்க இயல‌வில்லை.............................
எனெனில்
அவளின் கருவிழி 
காந்த ஈர்ப்பு விசை
என்றிருந்தேன்.............................
நான் சோர்வடையும் பொது 
அவளின் விழிகள்
பேசும் பேச்சுக்கள் நான் இருக்கிரென்
என்று சொல்வது எனக்கும் புரிகிறது.............................
உடலின் வெறேந்த பாகங்களும் 
உணர்த்தாத காதலை இந்த
சின்ன‌ இரு கருவிழிகள் 
என்னை சுட்டெரிக்கிறது.............................
ஆனால் நான் என்ன பண்ணுவது 
மென்மையாக‌ எவ்வளவு தான் 
நான் வாயால் எடுத்துக் கூறினாலும்
அவள் விழிகளின் பதில் என்னை ஆச்சரியப்படுத்தும்.............................
இந்த பரந்துவிரிந்த பூஉலகில் 
அவளை எந்த மூலயில்
படைத்தானோஅந்த இறைவன் 
கொடுமைக்காரன்.............................
நான் இங்கு தனியாக 
சிரமப்பட்டு கொண்டிருக்கும்பொது
அவளும் அருகிலிருந்தால்
நான் தனிமையை உணர மாட்டென் இல்லையா.............................
எல்லாவற்றிற்கும் காலம் 
பதில் சொல்லும்
என்றென்னை தேற்றினாலும்
மனம் எனோ என்னை மிகவும் பாடாய் படுத்துகிறது.............................
அவள் விழிகளை
நான் எப்பொழுது
நேரில் பார்ப்பேன் என  
காத்துகொன்டிருக்கும்.............................
உங்கள் அன்புள்ள
தமிழ் பிரியன்
காதல் இல்லாமல் காத்துகொண்டிருக்கும்
தஞ்சை குமணன்.............................

Tuesday, 24 January 2012

தனுஷ் இந்திப்படத்தில் நடிக்கிறார்!


மாதவன், கங்கனா ராவத் நடிப்பில் வெளியான இந்தி திரைப்படம் 'TANU WEDS MANU'. ஆனந்த் ராய் இயக்கிய முதல் இந்தி படம் இது. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. தமிழிலும் இப்படத்தினை ரீமேக் செய்ய இருக்கிறார்கள்.

ஆனந்த் ராய் இயக்க இருக்கும் அடுத்த படமான 'RAANJHNAA' நாயகனாக ஒப்பந்தமாகி இருக்கிறார் தனுஷ். WHY THIS KOLAVERI பாடல் மூலம் இந்தி திரையுலகிலும் பிரபலமான தனுஷ்,  இந்தியில் நடிக்கும் முதன் படம் இது. சமீபத்தில் வாரணாசி சென்று திரும்பினார் தனுஷ். சாமி கும்பிட சென்றார் என்று தகவல் வெளியானது. ஆனால் அவர் ஆனந்த ராய் உடன் சென்று அங்கு படப்பிடிப்பு நடக்க இருக்கும் இடங்களை பார்வையிட்டு திரும்பி இருக்கிறார்.

'ஆடுகளம்' படத்தில் தனுஷின் நடிப்பை பார்த்துவிட்டு அப்போதே அவரை ஒப்பந்தம் செய்து விட்டாராம் ஆனந்த் ராய். இப்படம் ஒரு அழகான காதல் கதையாம். TANU WEDS MANU படத்தினைப் போலவே இப்படத்தின் கதாபாத்திரங்களும், கதைக்களமும் டெல்லி, பஞ்சாப், சென்னை உள்ளிட்ட இடங்களை சுற்றியே இருக்குமாம்.

தனுஷ் இப்படத்திற்காக இந்தி கற்க இருக்கிறாராம். விரைவில் படப்பிடிப்பு துவங்க இருக்கிறது.

தஞ்சை குமணன்

நாத்து நட்ட பத்திரிக்கை நிருபர் எல்லாம் பெரிய பதிவராஊர்ல இருக்கிற பதிவரெல்லாம் ஒழுங்கா அமைதியா பதிவ போட்டுகிட்டு  ஊருக்குல்ல பெரிய பதிவர்னு சொல்லிக்கிட்டு திரியிரான். ஊர்ல இருக்கிறவன் எல்லாம் பன்னி குட்டி போட்ட மாதிரி பதிவுகளை போடுறாங்கன்னு சொல்லிக்கிட்டு திரிவான். ஆனா இவன் எலிகுஞ்சு போடுற மாதிரி பதிவ போடுவான். பாரா பாராவா இருக்கும், படிச்சி பார்த்தா ஒரு எழவும் இருக்காது. பதிவுலகில் பிரிவினைகள் தலைவிரித்தாடுகிறது. பதிவுலகம் ஆரம்பித்த நாளில் இருந்து ஒற்றுமையா இருந்த தமிழ் பதிவர்களை தமிழ்நாட்டு பதிவர்கள், இலங்கைப் பதிவர்கள்னு பிரித்த முதல் எட்டப்பன் இவன் தான்.

இவன் பதிவில் வந்த ஓட்டுகளை பார்த்தீர்கள் என்றால் எல்லாம் ஈழத்தமிழர்களின் ஓட்டாகத்தான் இருக்கும். இவனுக்கு 5 அடிப்பொடிகள். இவன் எதாவது வில்லங்க பதிவிட்டால் அதனை நான்கு பேர் கண்டித்து பின்னூட்டமிட்டால் அவர்களை வைத்து பதில் பின்னூட்டமிடும் சீப்பான ஆள் இவன். 

இவன் என்னவோ பிரபாகரன் பக்கத்துல இருந்த விடுதலைப்புலி தளபதி மாதிரி விடுதலைப்புலிகள் என்ன செய்தார்கள், எப்படி தப்பித்தார்கள் என்று இந்த நாதேரி கூடவே இருந்த பார்த்த மாதிரி பதிவெழுதி அதில் ஹிட்ஸ் சம்பாதிக்க நினைக்கும் கீழ்த்தரமான ஆசாமி அவன். 

பத்துப்பைசாவுக்கு கூட தகுதியில்லாத பதிவை நடத்தும் முதல் கேடுகெட்ட ஆசாமி இவன் தான். இவன் பதிவைப் படித்துப் பார்த்தால் தான் தெரியும். இவன் ஒரு வெத்துவேட்டு என்று. ஈழத்தமிழர்களை உசுப்பேத்திவிட்டு குளிர்காயும் இவன், பிரபாகரனை கூட இருந்து கழுத்தறுத்து வெளியில் சென்று விடுதலைப்புலிகளின் எல்லா ரகசியங்களயும் எடுத்துச் சொல்லி விடுதலைப்புலிகளின் வீழ்ச்சிக்கு காரணமாக இருந்த கருணாவுக்கு நிகரானவன் இவனே.

தஞ்சை குமணன்.


Saturday, 21 January 2012

சுபாஷ் சந்திர போஸின் ராணுவ நடவடிக்கைகள்


இந்தியாவைப் பிரிட்டிஷ் ஆதிக்கத்திலிருந்து விடுவிக்க, ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான் ஆகிய நாடுகளுடன் நேதாஜி ஒப்பந்தம் செய்து கொண்டார். ஜெர்மனியில் இந்திய தேசிய ராணுவத்தை அமைத்தார். 4 ஆயிரம் வீரர்கள் கொண்ட படை அது. அவர்கள் பிரான்சு நாட்டுக்கு சென்று, பிரிட்டிஷ் படைகளை எதிர்த்துப்போரிட்டனர். 1941 டிசம்பர் 7ந்தேதி, போரில் ஜெர்மனிக்கு ஆதரவாக ஜப்பான் குதித்தது. வெகு எளிதாக சிங்கப்பூரைக் கைப்பற்றியது. 1942 பிப்ரவரியில், சிங்கப்பூரிலிருந்த பிரிட்டிஷ் ராணுவம் ஜப்பானிடம் சரண் அடைந்தது. தாய்லாந்து, மலேயா, அந்தமான் ஆகிய நாடுகளையும் ஜப்பானிய படைகள் கைப்பற்றிக்கொண்டு, மேலும் முன்னேறின.

பிரிட்டிஷ் வசம் இருந்த ரங்கூனும், ஜப்பானியர் வசம் ஆகியது. ஜப்பானிடம் சரண் அடைந்த பிரிட்டிஷ் படைகளில் இந்திய ராணுவத்தினர் இருந்தார்கள். அவர்களைக் கொண்டு, "இந்திய தேசிய ராணுவம்" அமைக்கப்பட்டது. போரில் ஜப்பானின் கை ஓங்கிக்கொண்டிருந்தது. ஜப்பான் உதவியுடன் இந்தியாவை விடுவிக்க முடியும் என்று நேதாஜி கருதினார். ஜப்பானுக்குச் செல்ல முடிவு செய்தார். ஜப்பானுக்கு எப்படிச் செல்வது? கடலில் அமெரிக்க, பிரிட்டிஷ் கப்பல்களும், நீர்மூழ்கிகளும் சுற்றிக்கொண்டிருந்தன. விமானத்தில் செல்வதும், தரை வழியில் செல்வதும் அதிக ஆபத்தானவை. எல்லாவற்றையும் சிந்தித்துப் பார்த்த நேதாஜி, நீர்மூழ்கிக் கப்பலில் செல்ல முடிவு செய்தார். "இது ஆபத்தானது" என்று ஜெர்மன் அதிகாரிகள் எச்சரித்தனர்.

ஆனால் நேதாஜி துணிவுடன் 1943 பிப்ரவரி 8_ந்தேதி ஜெர்மனியில் உள்ள நீல் என்ற துறைமுகத்திலிருந்து நீர்மூழ்கிக் கப்பலில் பயணமானார். அவருடைய செயலாளர் கர்னல் ஹசன், ராணுவ அதிகாரி குலாம் ஹைதர், ஒரு ஜப்பான் அதிகாரி, ஒரு ஜெர்மன் அதிகாரி ஆகியோரும் உடன் புறப்பட்டனர். எதிரிகளின் போர்க்கப்பல்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவற்றின் பார்வையில் சிக்காமலும், விமானக் குண்டுவீச்சில் அகப்பட்டுக் கொள்ளாமலும் நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பல், ஆப்பிரிக்கா கண்டத்தைச் சுற்றிக்கொண்டு, இந்துமகா சமுத்திரத்தில் பிரவேசித்தது. மடகாஸ்கர் தீவுக்கு 400 மைல் தூரத்தில் ஜப்பான் அனுப்பி வைத்த நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று, நேதாஜியின் நீர்மூழ்கியை எதிர்கொண்டு வரவேற்றது.

ஜெர்மனி நீர்மூழ்கிக் கப்பலில் இருந்து ஜப்பான் நீர்மூழ்கிக் கப்பலுக்கு ஏப்ரல் 28ந்தேதி மாறினார் நேதாஜி. நீர்மூழ்கிக்கப்பல் பயணம் தொடர்ந்தது. இந்தோனேஷியாவைச் சேர்ந்த சுமத்ரா தீவை, மே 6_ந்தேதியன்று நேதாஜி அடைந்தார். அதாவது, நேதாஜியின் நீர்மூழ்கிக் கப்பல் பயணம் 3 மாதம் நீடித்தது. சுமத்திராவில் ஒரு வாரம் தங்கியபின் விமானம் மூலம் ஜப்பான் தலைநகருக்குப் பயணமானார். மே 16ந்தேதி டோக்கியோ போய்ச்சேர்ந்தார். அங்கு ஜப்பானிய அதிகாரிகளுடன் பேச்சு நடத்தினார். இந்தியா சுதந்திரம் அடைய ஜப்பான் எல்லா உதவிகளையும் செய்யும் என்று அவர்கள் உறுதியளித்தனர். ஜப்பானிலிருந்து புறப்பட்டு, ஜுலை 2ந்தேதி சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் மக்கள் அவருக்கு பிரமாண்டமான வரவேற்பு அளித்தனர்.

இந்தியர்கள் மட்டுமின்றி, மலேசியர், சீனர், ஜப்பானியர் ஆகியோரும் வரவேற்பில் கலந்து கொண்டனர். சிங்கப்பூரில் உள்ள இந்திய தேசிய ராணுவ அதிகாரிகளை அழைத்துப் பேசினார். போரில் புதிய விžகங்களை வகுத்தார். நேதாஜி மாணவராக இருந்தபோதே, "தேசிய மாணவர் படை"யில் சேர்ந்து ராணுவப் பயிற்சி பெற்றிருந்தார். எனவே, ராணுவத்தின் செயல்பாடுகளை நன்கு அறிந்திருந்தார். அவருடைய போர்த்திறன், ராணுவ அதிகாரிகளையே திகைக்க வைத்தது. அதன்பின் நேதாஜி என்ற பெயர் உலகமெங்கும் பரவியது. 1943 அக்டோபர் மாதம், "சுதந்திர இந்திய அரசாங்க"த்தை சிங்கப்பூரில் அமைத்தார். பிரதமர் பதவியையும், பிரதம ராணுவத் தளபதி பொறுப்பையும் அவர் ஏற்றார்.

பெண்கள் படையின் தளபதியாக தமிழ்ப்பெண்ணான மேஜர் லட்சுமி சுவாமிநாதன் நியமிக்கப்பட்டார். சுதந்திர அரசாங்கம் அமைக்கப்பட்ட 2 நாட்களில், பிரிட்டனுக்கும், அமெரிக்காவுக்கும் எதிரான போர்ப்பிரகடனத்தை நேதாஜி வெளியிட்டார். அரசாங்கத்தையும், ராணுவத்தையும் குறுகிய காலத்தில் பலப்படுத்தினார் நேதாஜி. தேசிய அரசாங்கம் போரை நடத்தியதுடன் நில்லாது, பல பள்ளிக்கூடங்களைத் திறந்தது; புதிய நாணயங்களை வெளியிட்டது. பத்திரிகைகளையும் நடத்தியது. சுதந்திர அரசாங்கத்தின் தலைமையகம், முதலில் சிங்கப்பூரில் இருந்தது. பிறகு ரங்கூனுக்கு மாறியது. இந்த அரசாங்கத்தின் கிளை அலுவலகங்கள், பல்வேறு தென்கிழக்கு ஆசிய நாடுகளில் அமைக்கப்பட்டன.

நேதாஜியின் சுதந்திர அரசுக்கு ஜப்பான், பிலிப்பைன்ஸ், ஜெர்மனி, இத்தாலி, அயர்லாந்து முதலிய நாடுகள் அங்கீகாரம் அளித்தன. சுதந்திர அரசுக்கென தனியாக "பாங்கி" தொடங்கவேண்டும் என்றார், நேதாஜி. "இதற்கு எவ்வளவு பணம் தேவைப்படும்?" என்று ஒரு முஸ்லிம் கோடீஸ்வரர் கேட்டார். "ஐம்பது லட்சம் ரூபாய் வேண்டும்" என்று நேதாஜி கூறியதும், "இப்போது முப்பது லட்சம் தருகிறேன். ஒரு வாரத்தில் மீதி இருபது லட்சம் தருகிறேன்" என்று கூறிய அந்தப் பிரமுகர், சொன்னபடியே ஐம்பது லட்சம் ரூபாய் கொடுத்தார். இரண்டே வாரங்களில் "ஆசாத் ஹிந்த் பாங்க்" தொடங்கப்பட்டது. இந்திய தேசிய ராணுவத்துக்கும், சுதந்திர அரசுக்கும் நிறையப் பணம் தேவைப்பட்டது. மக்கள் ஏராளமாக நன்கொடை அளித்தனர்.

நேதாஜிக்கு அணிவிக்கப்பட்ட மாலைகள் லட்சக்கணக்கான ரூபாய்களுக்கு ஏலம் போயின. ஒருமுறை, ஒரே மாலை 12 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போயிற்று! நகைகள், ரொக்கம், நிலமாக ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை ஒரு பிரமுகர் கொடுத்தார். பெண்கள் ஒன்று சேர்ந்து, நேதாஜியின் எடைக்கு எடை தங்க நகைகளை வழங்கினர். பர்மாவில் மட்டும் ரூ.8 கோடி வசூலாயிற்று. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வந்து குவிந்த நன்கொடை மூலம் ஆயுதங்களும், வெடிப்பொருட்களும் வாங்கினார்நேதாஜி. இந்திய தேசிய ராணுவத்தில் 50 ஆயிரம் வீரர்கள் இருந்தனர். 1,500 ராணுவ அதிகாரிகளின் மேற்பார்வையில் இவர்கள் செயல்பட்டனர். மேஜர் லட்சுமி தலைமையில் இருந்த பெண்கள் ராணுவம், "ஜான்சிராணிப்படை" என்ற பெயரில் இயங்கியது.

இதில் 1,200 பெண்கள் இருந்தனர். "தற்கொலைப்படை" ஒன்றும் இயங்கியது. இவர்கள், முதுகில் வெடிகுண்டுகளை கட்டிக்கொண்டு, எதிரிப்படைகளின் டாங்கிகள் அணிவகுத்து வரும்போது, பாய்ந்து சென்று குறுக்கே படுத்துக்கொள்வார்கள். டாங்கிகளால் அவர்கள் நசுக்கப்படும் அதே நேரத்தில், குண்டுகள் வெடித்து டாங்கிகள் சின்னாபின்னமாகச் சிதறும்! இந்த தற்கொலைப்படையில், இளைஞர்கள் ஏராளமாகச் சேர்ந்தனர்.

"டெல்லி சலோ!" என்று நேதாஜி கட்டளையிட்டதும், இந்திய தேசிய ராணுவத்தினர் இந்தியாவுக்குள் புகுந்தனர். பல இடங்களில் பிரிட்டிஷ் படைகள், தேசிய ராணுவத்திடம் தோற்றுப் பின்வாங்கியது. "ஜான்சிராணிப்படை" பல மைல்கள் முன்னேறியது. அவர்களிடம் வெள்ளையர் ராணுவம் சரண் அடைந்தது. மணிப்புரி சமஸ்தானத்தின் பல பகுதிகளை தேசிய ராணுவம் கைப்பற்றியது. "விரைவில் இந்தியாவை விட்டுப் பிரிட்டிஷ் படைகள் விரட்டியடிக்கப்படும். டெல்லியில் சுதந்திரக்கொடியை நேதாஜி பறக்க விடுவார்" என்று எல்லோரும் எதிர்பார்த்தனர். ஆனால் அதன்பிறகு நடந்தே வேறு. அது எல்லோருக்கும் தெரியும்.

தஞ்சை குமணன்

Wednesday, 11 January 2012

நண்பன் விமர்சனம்விஜய், ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா நண்பர்கள். இஞ்சினியரிங் கல்லூரியில் முதலாமாண்டு சேர்கிறார்கள். இவர்களது சக கல்லூரி மாணவன் சத்யன். கல்லூரி முதல்வர் சத்யராஜ். அவரது மகள் இலியானா. படிப்பில் எப்போதும் முதல் மாணவனாக வருகிறார் விஜய். எப்போதும் கடைசியில் வருபவர்கள் ஸ்ரீகாந்த் மற்றும் ஜீவா. சத்யராஜின் கண்டிப்பு விஜய்க்கு பிடிக்கவில்லை.  சத்யன் குறுக்குவழியில் முதலிடத்தை கைப்பற்ற நினைப்பவர். சத்யராஜூக்கும் விஜய்க்கும் ஏற்படும் கருத்து மோதலால் சத்யராஜூக்கு விஜயை பிடிக்கவில்லை. சத்யராஜின் மகள் இலியானாவுடன் முதலில் மோதலில் ஈடுபடும் விஜய் பிறகு காதலிக்கிறார். இலியானாவும் தான். ஸ்ரீகாந்த் விலங்குகளை புகைப்படமெடுப்பதில் ஆர்வமிருக்க பெற்றோரின் கட்டாயத்தினால் இஞ்சினியரிங் படிக்க வந்திருப்பதை அறிகிறார் விஜய். ஜீவாவுக்கும் படிப்பில் ஆர்வமில்லாததை அறிகிறார்.

ஸ்ரீகாந்த், ஜீவா இருவரையும் அவர்கள் விரும்பும் துறைக்கு பல மோதல்கள், ஜீவாவின் தற்கொலை முயற்சி, இலியானா அக்காவின் பிரசவம், சத்யனின் தில்லுமுல்லுகள் ஆகியவைகளை தாண்டி அனுப்பி வைத்து வெற்றி பெறவும் வைக்கிறார். ஸ்ரீகாந்த் ஒரு புகழ் பெற்ற விலங்குகள் புகைப்படக்காரர் ஆகிறார். ஜீவாவுக்கு கேம்பஸ் இன்டர்வியூவிலேயே வேலையும் கிடைக்கிறது. சத்யராஜூம் திருந்தி விடுகிறார். இவ்வளவும் செய்யும் விஜய் படிப்புக்காலம் முடிந்ததும் இவர்களை விட்டு விலகி விடுகிறார். காணாமல் போன விஜய் என்னவானார், ஸ்ரீகாந்த்தும் ஜீவாவும் அவரை கண்டுபிடித்தார்களா என்பதே படத்தின் கதை.

விஜய் நடிப்பில் அசத்தியிருக்கிறார். முந்தைய படங்களில் உள்ள பில்ட்அப்புகள் போல் இல்லாமல் படத்தில் கதையை ஒட்டிய பிலட்அப்புடன் வலம்வருகிறார். முதல் அறிமுக காட்சியில் காலேஜ் சீனியருக்கு சிறுநீர் போகும் போது கரண்ட் ஷாக் வைக்கும் போதும், கல்யாணத்தில் முதல்முறையாக இலியானாவை சந்தித்து அட்வைஸ்கள் கொடுத்து சத்யராஜிடம் மாட்டிக் கொள்ளும் போதும்,  இன்னும் பல பல காட்சிகளில் அசத்துகிறார். கண்டிப்பாக விஜய்க்கு இது சூப்பர்ஹிட் படம் தான்.

ஜீவா அவரது இன்னொசன்ட் நடிப்பில் அசத்துகிறார். சரக்கடித்து விட்டு சத்யராஜ் வீட்டில் ஒன்னுக்கு அடித்து விட்டு மறுநாள் வகுப்பில் சத்யராஜிடம் மாட்டிக் கொண்டு தற்கொலை செய்துகொள்ள மாடியில் இருந்து குதிக்கும் போது நெகிழ வைக்கிறார். ஸ்ரீகாந்துக்கு இத்தனை நாளாக இறங்கிக் கொண்டிருந்த கிராப்பை ஏற்ற வந்திருக்கும் படம் இது. சத்யன் படம் முழுக்க வருகிறார். படமே அவரைச்சுற்றி தான் இயங்குகிறது. இனிமேல் கண்டிப்பாக அவருக்கு தமிழ்படங்களில் காமெடிக்கு முக்கய இடம் கிடைக்கும். படத்தின் பாடல்கள் கேட்கவும் பார்க்கவும் அருமையாக உள்ளது.

இலியானா சும்மா பார்க்கும் போதே கிக்கு ஏற்றுகிறார். என்ன வளைவு நெளிவு. அருமையான ஸ்ட்ரக்சர், ஆனால் முகம் தான் வத்தலாக முற்றிப் போய் இருக்கிறது. வைரஸ் என்ற பட்டப்பெயருடன் வரும் சத்யராஜூக்கு மிக முக்கியமான கேரக்டர். எல்லாவற்றையும் ஸ் ஸ் என்று பேசுவது அழகு. விளையாட்டுக்காக வேலையாளிடம் ஸ்ரீகாந்துக்கும் ஜீவாவுக்கும் வேலை கிடைத்தால் என் மீசையை எடுத்து விடு என்று விளையாட்டுக்கு சொல்ல அவர்களுக்கு வேலை கிடைத்ததும் அவர் மீசையை எடுத்து விட இவர் குதிப்பது சூப்பர் காமெடி.

தஞ்சை குமணன்

Tuesday, 10 January 2012

சென்னையின் காலங்கள்


சென்னையின் வேனல் கால முகம் யாது? தெரு ஓரத்தில் ஆலைக் கரும்பைப் பிழிந்து அழுக்குப் பனிக் கட்டிச் சீவலும், எலுமிச்சை சாறும் சேர்த்து நுரைக்க நுரைக்க கிளாஸ் டம்ளரில் நீட்டும் வண்டி. அதன் பக்கம் வியர்த்து விறுவிறுத்து, கையில் பிடித்த சூட்கேஸோடு காத்திருந்து, வாங்கிக் குடித்த பிறகு சிகரெட் பற்ற வைக்கும் மெடிக்கல் ரெப்ரசெண்டேடிவாக அந்த முகம் எனக்குத் தென்படும்.

டிசம்பர் பதினைந்திலிருந்து ஜனவரி பதினைந்து வரை குறுகி வரும் குளிர் காலத்தில் பாதி நகரம் சரணம் ஐயப்பா விளிக்க ஆரம்பித்து கேரளா எக்ஸ்டென்ஷன் ஆகிவிடுவதால், நெற்றியில் சந்தனமும், மலையாள தாடியும், கழுத்தில் துளசி மாலையுமாகப் பாதி சென்னை முகம் மாறும். மீதி, சபா கேண்டீனில் கீரை வடை சாப்பிட காரில் வந்து இறங்கும் மேட்டுக்குடி மூஞ்சியில் பிய்த்தது. ஈரக் கையோடு உள்ளே போய் அருணா சாயிராம் கச்சேரியில் மராத்தி அபங்கில் உருகி திரும்ப வெளியே வந்து சபா கழிவறை மூத்திர வாடையும் காதில் விழும் மீதிப் பாட்டுமாக அடை அவியலை அதம் செய்ய வாயைத் திறக்கும் அது.

சென்னையின் மழைக்கால முகம் வேறே மாதிரி. சுரணை குறைந்து மரத்துப் போன உடம்பும், மனசுமாக, தெருவில் தேங்கி நிற்கும் கழிவு நீரில் கால் அமுங்க கையில் லெதர் பையில் வைத்த காலி லஞ்ச் டப்பாவோடு நடக்கிறவனின் முகம் அது. சேறும் சகதியும் பள்ளமும் மேடும், கடந்து கலங்கிய நீரை மேலே எறிந்து விட்டு சீறிப் பாய்கிற கார்களைக் கவனிக்காமல் செல்போனில் பேசிச் சிரித்தபடி நகர்கிற, ஈர சல்வார் காலோடு ஒட்டிய இளம் பெண்ணின் முகம் அது.

வெட்டி வைத்த சாக்கடைப் பள்ளத்தில் தலை குப்புற வீழ்ந்து, நெட்டுக் குத்தலாக அதில் பயிர் செய்த இரும்புக் கம்பிகளில் ஒரு பத்து இருபதாவது ஒரே நேரத்தில் கழுவேற்ற பரிதாபமாக மரித்த அந்த இளம் பெண்ணின் குழந்தைத்தனம் மாறாத முகமாக சென்னையின் மழைக்கால முகம் போன வாரம் பத்திரிகைகளில் பயமுறுத்தியது.

உடனே அது மறக்கப்பட்டு, மழை நின்ற சென்னையின் முகம் டெண்டுல்கரின் நூறாவது செஞ்சுரிக்காக ஆவலோடு காத்திருக்கப் பார்வையில் படுகிறது. டெண்டுல்கர் இன்னும் ஒரு நூறு செஞ்சுரி அடிக்கட்டும். சாக்கடைக் குழாய்ப் பள்ளத்தில் யாரும் எப்போதும் விழாத சந்தோஷத்தில் சென்னை சந்தோஷமாகச் சிரித்தபடி அதை வரவேற்கட்டும்.

தஞ்சை குமணன்

Sunday, 8 January 2012

முல்லைப்பெரியாறு பிரச்சனையும் Dutch boy and the Dike கதையும்


சில நாட்கள் இடைவெளிக்கு பிறகு எழுத வந்துள்ளேன். 


இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்களை உங்களுக்கு கூற நான் விழைகிறேன். சில நாட்களாக பதிவெழுத யோசித்து வரும் போது சிறு வயதில் நான் பள்ளியில் படித்த கதையையும் அது தற்காலத்தில் முல்லைப்பெரியாறு அணை பிரச்சனையுடன் ஒரே அலைவரிசையில் இருப்பது போல் தெரிந்தது. அதனால் அந்த கதையை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  Dutch boy and the Dike  என்ற அநத கதையில் ஒரு பையன் ஒரு அணையில் இருக்கும் ஒரு சிறு துவாரத்தை அடைக்கும் பொருட்டாக தனது விரலை முதலில் வைத்து பார்த்தான். போதாமல் தனது கையை வைத்தான் திரும்பப் போதாமல் தனது தோற்பட்டையை வைத்து தடுத்தான். அப்படி இருந்தும் தண்ணீர் சிறிது கசிந்தவாறே இருந்தது. அந்த பையன் வீட்டுக்கு போகாமல் அந்த துளையை அடைக்கும் முயற்சியிலேயே இருந்தான். காலையிலேயே அவனது பள்ளி கனமழையை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது. அந்த பக்கமாக வந்த அந்த பையனின் வீட்டுக்கு பால் தரும் பால்காரன் அந்த பையனை பார்த்து விட்டு அவன் வீட்டுக்கு சென்று அணையில் நடக்கும் விஷயத்தை கூறிவிட்டான். அதனை அறிந்த அந்த பையனின் வீட்டுக்காரர்கள் மட்டுமில்லாமல் அந்த அந்த தெருவில் உள்ள அனைவரும் அணைக்கு புறப்பட்டு சென்றனர். அனைவரும் சேர்ந்து அணையில் உள்ள துவாரத்தை அடைத்தனர். 

இந்த கதையில் ஒரு பையன் ஒரு கிராமத்தையே அணையின் ஆபத்திலிருந்து காப்பாற்றும் விதமாக கதை அமைந்திருக்கும். இதே இந்தியாவில் பென்னி குயிக் என்கிற ஆங்கிலேயர் நமக்காகவும் நமது பக்கத்து மாநிலத்தினருக்காகவும் பயன்தரும் வகையில் அணை ஒன்றை கட்டி அருந்தொண்டு புரிந்தார் நாம் அந்த ஆங்கில கதையை அறிந்திருக்க வாய்ப்பில்லை. இது நாம் அனைவரும அறிந்த முல்லை பெரியாறு அணை பிரச்சனை வேண்டாம் என்று என் மனதுக்கு புரிந்தாலும் என் தனி மனித விருப்பத்தை உங்களுக்கும் கூற நான் கடமைபட்டு இருப்பின் விருப்பம் இருந்தால் அது போல் நமது மாநிலத்திற்கு அணை பிரச்சனை வந்த போது Dutch Boy எப்படி தன்னை வருத்திக்கொண்டு அந்த ஊரையே காப்பாற்றினானோ அதே போல இங்கு தமிழ்நாட்டில் பல போராட்டங்களும் இங்கு நடக்கையில் நான் சும்மா தினமும் வேலைக்கு பொய்வருகிறேன். இதை என் நான் இங்கு கூற ஒரு வருத்தமாகத்தான் உள்ளது. என் பங்குக்கு நானும் என் கண்டனத்தை என் வலைப்பூவில் கூற ஆசைப்பட்டேன். அதன் விளைவாகவே முல்லை பெரியாறு அணைக்கும் Dutch Boyக்கும் உள்ள ஒற்றுமை விஷயங்களை நான் என் கருத்தில் கூறுகிறேன். 

தஞ்சை குமணன்