Followers

Saturday 28 January 2012

அமிதாப் - ரஜினி இணைந்து நடிக்கிறார்கள்


அமிதாப் பச்சன், ரஜினி இருவரும் இறுதியாக சேர்ந்து நடித்த படம் அந்தா கானூன்.  இப்படம் 28 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தது. எனக்கு மிகவும் பிடித்த படம் அது. ஐந்து முறைக்கு மேல் பார்த்திருக்கிறேன். மறுபடியும் இருவரும் சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள். இப்படத்தினை இயக்க இருக்கிறார் பூரி ஜெகன்நாத். 

இது குறித்து அவர் கூறியிருப்பது " சமீபத்தில் ரஜினி சாரை சந்தித்துப் பேசியபோது, நான் அமிதாப் பச்சனை வைத்து இயக்க போகும் படம் குறித்து பேசினேன். அப்புதிய படத்தில் நீங்களும் இடம் பெற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தேன். ரஜினி சார் அவ்வேண்டுகோளை ஏற்றுக்  கொண்டார். அமிதாப் பச்சனுடன் மீண்டும் இணைந்து நடிப்பது குறித்து அவர் சந்தோஷம் தெரிவித்தார். நீண்ட காலமாகவே ரஜினி சாரை இயக்க வேண்டும் என்பது எனது ஆசை. இப்போது அந்த ஆசை நிறைவேறியுள்ளது.  அதேசமயம், இரு பெரும் ஸ்டார்களான அமிதாப் மற்றும் ரஜினியை இணைத்து இயக்கப் போவது எனக்கே மிகப்பெரிய சந்தோஷமாக இருக்கிறது." என்று தெரிவித்துள்ளார்.

அமிதாப் நாயகனாக நடித்த 'Buddah Hoga Tera Baap' என்ற படத்தை இயக்கியவர் பூரி ஜெகன்நாத் என்பது குறிப்பிடத்தக்கது. நாமும் இருவரும் இணைந்து நடித்து வெளிவரும் அந்த நாளை எதிர் பார்த்து காத்திருப்போம்.

தஞ்சை குமணன்


5 comments:

பொ.முருகன் said...

அமிதாப்,ரஜினி இணைந்து கடைசியாக நடித்தபடம்,'ஹம்'. இதைத்தான் பட்டி, டிங்கரிங், பார்த்து தமிழில் 'பாட்ஷா' வாக்கினார்கள்.

தஞ்சை குமணன் said...

///பொ.முருகன் said...
அமிதாப்,ரஜினி இணைந்து கடைசியாக நடித்தபடம்,'ஹம்'. இதைத்தான் பட்டி, டிங்கரிங், பார்த்து தமிழில் 'பாட்ஷா' வாக்கினார்கள்///
எனக்கு படங்களின் மீது பெரிய அபிப்ராயம் உண்டு அருமையான சிறந்த உண்மைகளை சொல்லி வர வேண்டும் சகோ.

sharbu007 said...

'பாட்ஷா'- 'Buddah Hoga Tera Baap' நாமும் இருவரும் இணைந்து நடித்து வெளிவரும் அந்த நாளை எதிர் பார்த்து காத்திருப்போம்.

sankar said...

இதை... இதை.. இதைத்தான் எதிர் பார்த்து காத்திருப்போம்.

karthik87 said...

இருவரும் சேர்ந்து நடிக்க இருக்கிறார்கள் எதிர் பார்த்து காத்திருப்போம்.

Post a Comment