Followers

Thursday 1 March 2012

பருத்தி வீரனுக்கு எதிராக அமீர்


அமீர் இயக்கத்தில் கார்த்தி, ப்ரியாமணி நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான படம் 'பருத்திவீரன்'. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் அமீர் மற்றும் ப்ரியாமணி இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது.

படத் தயாரிப்பாளர்களான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பருத்திவீரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கை வெளியிட தீர்மானித்து அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. படத்திற்கு 'PALANTI VEERUDU' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

இப்படத்தை மார்ச் 2ம் தேதி வெளியிட திட்டமிட்டனர். இப்படத்திற்கு எதிராக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்து இருக்கிறார் இயக்குனர் அமீர்.

இது குறித்து அமீர் " என்னுடைய பருத்தி வீரன் திரைப்படத்தை என்னுடைய அனுமதி இல்லாமல், எனக்கான ரைட்ஸ், ராயல்ட்டி தொகை எதுவுமே கொடுக்காமல் தெலுங்கில் 2ம் தேதி வெளியாக முடிவு செய்து இருக்கிறது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.

இது தெரிந்து நான் ஏற்கனவே ஜெமினி கலர் லேப்பிற்கு சென்று,  நீங்கள் தெலுங்கு டப்பிங் ரைட்ஸ், ரீமேக் ரைட்ஸ் நெகட்டிவ் கொடுக்க கூடாது  என்று லெட்டர் கொடுத்தேன்.

அவர்களும் அதை வாங்கி வைத்துக் கொண்டு,  நாங்கள் யாருக்கும் தரமாட்டோம் என்று கூறினார்கள். ஆனால் இப்போது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் ஜெமினி இருவருமே என்னை ஏமாற்றி தெலுங்கில் இப்படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

இப்போது நான் ஒரு கதை, திரைக்கதை ஆசிரியராக எனது படத்தினை என்னுடைய அனுமதி இல்லாமல் வெளியிடுகிறார்கள் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்து இருக்கிறேன். " என்று தெரிவித்துள்ளார்.

இப்புகாரால் 'பருத்திவீரன்' தெலுங்கு பதிப்பு படம் வெளியாகுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. 

தஞ்சை குமணன்

2 comments:

karthik87 said...

அவ்வளவு தான் நாங்கள் யாரும் நண்பரே..

அக் ஷயா said...

அவ்வளவு தான் நண்பரே..

Post a Comment