Followers

Friday, 18 March 2016

ஜெய் நடித்த புகழ் படத்தின் விமர்சனம்

ஜெய், சுரபி நடித்த புகழ் படத்தின் விமர்சனம். ஒரு மைதானத்திற்காக அமைச்சருக்கும் இளைஞனுக்குமான சண்டையே புகழ் படத்தின் கதை.



தஞ்சை குமணன்

Saturday, 3 January 2015

ஆரூர் மூனா - கடுப்பேத்திய ஆன்மீக பயணம்

உள்ளே போனால் அர்ச்சனை செய்யும் அய்யர் பூஜை முடித்ததும் கூச்சமேயில்லாமல் தட்சணை கொடுங்கள் என்று வாய் விட்டு கேட்கிறான். பிச்சையா என்று கேட்டேன். எங்கப்பா என்னை தள்ளிக் கொண்டு வெளியில் வந்தார். தலையில் அடித்துக் கொண்டு உனக்கு அறிவேயில்லையா, அது இதுன்னு திட்ட ஆரம்பித்து விட்டார்.

வாயை மூடிக்கிட்டு வண்டியை எடுத்தேன். அடுத்ததா போனது காளஹஸ்தீஸ்வரர் கோயில், மாரியம்மன் கோயில் ரயில் நிலையத்திலிருந்து 2 கிமீ தூரத்தில் இருக்கிறது கோயில். ஆயிரம் ஆண்டு பழமையான கோயில். ஆன்மீகவாதிகளுக்கு ஒரு தகவல். திருப்பதிக்கு அருகில் இருக்கும் காளஹஸ்திக்கு இணையான கோயிலாம் அது. அங்கு செய்யப்படும் பரிகாரங்களுக்கு இணையாக இங்கும் செய்யப்படுகிறது.


Saturday, 20 December 2014

ஆரூர் மூனா - பிகே படம் பார்க்க விரும்பிய கதை

அதனால் முதல் காட்சிக்கு நான் செல்லவில்லை. ஆனால் அந்த படத்தின் ரிசல்ட் கேள்விபட்டவுடன் இரவுக்காட்சிக்கு சென்றே ஆக வேண்டும் என்று முடிவு செய்து படையை திரட்டிக் கொண்டு கிளம்பினால் சத்யம் ஹவுஸ்புல். அடுத்ததாக சென்றது மெலோடி என்று நினைக்கிறேன் நினைவில் இல்லை, அங்கும் ஹவுஸ்புல். அண்ணாவில் முதல் வரிசையில் தான் இடமிருந்தது. அண்ணா திரையரங்கம் எனக்கு தெரிந்து ஹவுஸ்புல்லானது அன்று தான்.


முன்னாபாய் படத்தை விட லகே ரகோ முன்னாபாய் படம் ட்ரிபுள் ஹிட். காட்சியமைப்பிலும். அப்படித்தான். கிட்டத்தட்ட காலாவதியாகி விட்டது என்று நினைத்த காந்தியிசம் இந்த காலத்திற்கு எப்படி பயன்படுத்த முடியும் என்பதை பக்காவான திரைக்கதையில் சொல்லி அசத்தியிருந்தார். மதிப்பில் மேலும் சில படி உயர்ந்தார் இயக்குனர்.


Friday, 19 December 2014

ஆரூர் மூனா - PK - சினிமா விமர்சனம்

பசிக்கிறது சாப்பாடு வேணும் என தான் வாங்கிய சாமி சிலையிடம் அமீர்கான் வேண்ட ஒரு அம்மா சம்சா வழங்க பிரமித்துப் போய் ரிமோட் வேணும் என வேண்ட, கிடைக்காமல் சிலை கொடுத்தவனிடம் சண்டை போட, அவனோ கோயிலுக்குள் சென்று பிரார்த்தித்தால் கிடைக்கும் என சொல்ல, அங்கும் ரிமோட் கிடைக்காமல் போலீஸில் கம்ப்ளைண்ட் பண்ணுவது என மனுசன் பின்னுகிறார்.


கோயில் ஏமாற்றியதால் தேங்காய், பூ, பழம் சகிதம் சர்ச்சுக்கு போய் பூஜை செய்வதும், சர்ச்சில் இருப்பவர்கள் விரட்டும் போது, சர்ச்சில் ஒயினை பிரசாதமாக வழங்குகிறார்கள் என்று அறிந்ததும், ரெண்டு ஒயின் பாட்டிலுடன் மசூதிக்கு செல்வது என அதகளம் பண்ணுகிறார் அமீர்.

Thursday, 11 December 2014

ஆரூர் மூனா - லிங்கா

வேறென்ன சொல்ல ரஜினி ரஜினி. இந்த ஒரு வார்த்தை போதும் மனம் மகிழ. மூளைக்கு தெரிகிறது இதெல்லாம் அதிகம் என. ஆனால் என்ன செய்ய மனது இதைத்தான் விரும்புகிறது.





ரஜினி சந்தானம் அன் கோவுடன் சென்னையில் திருட்டு தொழில் செய்து வருகிறார். தாத்தா ராஜா லிங்ககேஸ்வரன் சொத்துக்களை இழந்து குடும்பத்தை நிர்க்கதியில் விட்டு விட்ட கோபத்தில் இருக்கிறார் பேரன் லிங்கா. 


ஆனால் தாத்தா கட்டிய கோயிலை அவர் தான் திறக்க வேண்டும் என ஊர்க்காரர்கள் விரும்பி அனுஷ்கா மூலம் ரஜினியை ஊருக்கு அழைத்து வருகின்றனர். அங்கு மரகதலிங்கத்தை திருட முயற்சிக்கும் போது தாத்தாவின் கதை தெரிய வருகிறது.

மேலும் படிக்க

Wednesday, 3 December 2014

ஆரூர் மூனா - ஒரு விபத்தும், 23ம் புலிகேசி படமும்

ஆம்புலன்ஸில் ஏற்றி அவன் தலையில் துணியை சுற்றி என் மடியில் வைத்துக் கொண்டேன். அவனுக்கு நினைவு இருந்தது. ஆந்திரா பையன் எப்படி விபத்து நடந்தது என்று தெலுகில் என்னிடம் கூறிக் கொண்டே வந்தான். ஆம்புலன்ஸ் அரசு மருத்துவமனை உள்ளே நுழையும் போது சிறு விசும்பலுடன் தலை தொங்கியது.
மருத்துவர்கள் சோதித்து அவன் இறந்து விட்டதாக சொல்லி விட்டார்கள்.

மேலும் படிக்க


Monday, 1 December 2014

ஆரூர் மூனா - வீரவன்னியர், வீரதேவர், வீரகவுண்டர் தேவையா?

அது என்னங்கடா வீர வன்னியன், முரட்டு தேவன், வீர கவுண்டன், தெறி வீர மறவன்னு அடைமொழி, அதுவும் பேஸ்புக்ல. நீங்கள்லாம் அரிவாள்ல பல்லு தேய்ச்சி கத்தியால காலை டிபன் சாப்பிடுறவனுங்களா. 
ஏன், நான் வீரன்டான்னு சொல்லி ஒரு அய்யர் ஓட்டல்ல போய் காசு கொடுக்காம சாப்பிட்டு பாரு. நிஜமாவே ஒரு வீர அய்யரை அங்க பாப்ப.
நிஜத்துக்கு பக்கத்துல வாழப் பழகுங்கடா வெங்காயங்களா. 

அந்த பொங்கலுக்கு காரணம்
ஒரு நாள் காலையில் ஊர்ப்பக்கத்தை சேர்ந்த ஒருத்தர் உள்டப்பியில் வந்து நீங்க எங்க சாதி தானே, அதனால் பின்னாடி வீர .............................. அப்படின்னு போட்டுக்கங்க. அப்பத்தான் கெத்தா இருக்கும்ன்னார்.

மேலும் படிக்க


Sunday, 30 November 2014

ஆரூர் மூனா - காவியத்தலைவன் படம் பார்த்த / பார்க்க விரும்பிய கதை

வசந்தபாலன் படங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும். அதிலும் தோத்தவனை நாயகனாக வைத்து அவர் இயக்கிய வெயில் எனக்கு மிக மிக நெருக்கமான படம். அந்த படத்தில் வரும் பசுபதி கேரக்டர் கிட்டத்தட்ட நானே தான். பிரார்த்தனா டிரைவ் இன் தியேட்டரில் அந்த படத்தின் க்ளைமாக்ஸ் நேரத்தில் நான் அழுத அழுகைக்கு தியேட்டரில் அமர்ந்திருந்த எல்லோரும் என்னை ஆறுதல்படுத்தினர். காருக்குள் கில்மா பண்ணிக்கிட்டு இருந்த ஜோடிகள் உள்பட.



 

அங்காடி தெரு படமும் அப்படித்தான். நான் படம் பார்த்து ஓவராக உணர்ச்சி வசப்பட்டு சேர்மக்கனி ரொம்ப கஷ்டப்படுறா, நானே கட்டிக்கிறேன்னு என் வீட்டம்மாக்கிட்டயே சொல்லி டின்னர் சாப்பிடும் போது நடுமுதுகிலேயே மிதி வாங்கினேன்

மேலும் படிக்க

Saturday, 29 November 2014

ஆரூர் மூனா - நாத்திகர்கள் கோவிலுக்கு செல்லக் கூடாதா

ஒரு பதிவர் அவர், பெயர் வேண்டாமே. அவ்வப்போது வந்து என்னிடம் வாலன்டியராக சாட் பண்ணுவார். நான் ப்ரீயாக இருக்கும் போது பதிலளிப்பேன். நான் திருவாரூர்க்காரன் என்று அறிந்ததும் தேர் பற்றியும் மும்மூர்த்திகள் பற்றியும் விவாதிப்பார். எனக்கு தெரிந்தவற்றை நான் கூறுவேன். தல புராணம் பற்றியும் கேட்டு தெரிந்து கொண்டார்.

மேலும் படிக்க


Saturday, 15 February 2014

திருச்சியின் தேவதையே எனக்கான சுந்தரியே

அன்புள்ளம் கொண்ட மக்களே,
 நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு பதிவு. என்னவளுக்காக.

திருச்சியில் வாழும் மனதிற்கினிய மங்கையே
என் வாழ்வின் கங்கையே
மனமெல்லாம் பொங்கியே
உனக்காக மட்டும் சொல்கிறேன் இங்கயே
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்


"தாவணியில் தேவதையாய்
கண்ணுக்கு தோன்றியதால்
தினம் அவளை காணவேண்டி
வேட்டியும் விபூதி பட்டையுமாய்
சாயரட்சை வேளையில்
பெரிய கோவிலில் காத்திருந்தேன்


தோழியுடன் வந்தமரும் அவளை
தரிசனம் செய்ய வேண்டி
எப்பொழுதும் பின்வரிசை
இடத்தினிலே நிரந்தரமாய்
நின்றிருந்தேன் ஒத்தையிலே

கண்கள் மெல்ல மூடி
மெல்லியதாய் மந்திரத்தை
மனமுருகி வேண்டிக் கொண்டே
பிரார்த்திக்கும் அவள் முகத்தை
காண கண் கோடி வேண்டும்"

என்று உனை நினைத்து காதலும் கசிந்துருக
கவிதை தான் பாடிடவே ஏங்குதே என் மனமே

கரம்பிடிக்கும் நாளை எண்ணி காத்திருக்கேன்
கிளிபோலே
அந்த நாளை நினைத்து மனது ஆர்பரிக்கிறது
அலைபோலே

தஞ்சை குமணன்

Tuesday, 26 November 2013

கள்ள மனம் கயவு குணம்

ரொம்ப நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்று எழுதுகிறேன்

தோணியதை மட்டும் பெரிதாக நினைக்கும்
பிஞ்சு மனம் பிள்ளைகுணம் எதற்கு,
கள்ள மனம் கயவு குணம் எதற்கு
காட்டுக்குள் சிங்கம் பசித்திருந்தது எதற்கு
சூறாவளி நம்மை என்ன செய்யும்
மழலைகளுக்கு தெரியாத பேய்களின் குணம் எதற்கு
பூச்சிக்கு தெரியாத கடலின் ஆழம் எதற்கு
நல்லவன் என்றும் வாழ்வான் என்பதற்கு
காணும் எதுவும் நமக்கே சொந்தம் அல்ல
பிச்சை போடவும் பணமும் இருக்கனுமா
நல்ல சொக்காய் போட்டவன் பணக்காரன் அல்ல
என்னாலும் எதுவும் செய்ய முடியுமா என்ன
பூமிக்கு என்று கடவுள் வர போகிறாரோ
பங்கு வர்த்தகங்களும் பரிமாற்றங்களும் எதற்கு
பாராட்டுக்கள் என்றைக்கு எல்லோருக்கும் கிட்டும்
என்று யாருக்கும் தலைவலி வராது
சளி பிடித்தாலும் பால் அருந்தலாமோ
நயவஞ்சகம் இன்னும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது
வேலை என்று எல்லோருக்கும் கிட்டும்
எல்லோராலும் பேச முடியம் தானே
அருஞ்செயல் எல்லோராலும் செய்ய முடியும் தானே
நான் என்று பிழைத்துக்கொள்வேன்....

தஞ்சை குமணன்

Wednesday, 29 May 2013

இந்தியாவில் நாத்திகர்கள் அதிகரிக்கின்றனர்

கண்ட கண்ட மதவாதிகள் தான் கும்பிடும் மதத்தையும் மூடநம்பிக்கை பழக்க வழக்கத்தையும் தான் உலகில் பெரியது என்று எண்ணும் போது என்னைப் போன்ற பகுத்தறிவாளர்கள் நாங்கள் தான் இந்தியாவில் அதிகம் என்று எண்ணுவதில் தப்பேதும் இல்லை.

மூடப் பழக்கமுள்ள மதவாதிகளே மூடிக் கொள்ளவும். இல்லை கழுவி வைத்துக் கொள்ளவும். 

தஞ்சை குமணன்

Sunday, 11 November 2012

INNUM NIRANDHARA VELAI KIDAIKALAI


Monday, 13 August 2012

அனிருத் ஆன்ட்ரியாவின் சூடான முத்தம்




எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும்..........

Monday, 6 August 2012

மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு!


 
        சயாம் மரண ரயில் - மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு...! எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும் இந்த தமிழர்களை...? இவர்களுக்காக ஏன் ஒரு நினைவுக்குறிப்பு கூட இல்லை...? ஏன் இவர்களின் வரலாறு மறக்கப்பட்டது...? இவர்களைப் பற்றி எழுத ஏன் இவ்வளவு காலம் ஒருவருக்கு கூட மனம் வரவில்லை...? முன்னுரை மற்றும் ஆசிரியரின் உரையைப் படிக்கும் போதே தோன்றிய கேள்விகள் தான் இவை.  இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜப்பான், அப்போதைய நிலைமையை சாதகமாக்கி தன் எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியது.

    மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் பர்மாவும் அதன் பிடியில் விழுந்தது. அப்போது தான் நேதாஜி காங்கிரஸை விட்டு விலகி இங்கிலாந்துக்கு எதிரான நாடுகளின் உதவியை நாடினார்.  அவரது இந்திய தேசிய இராணுவம் சிங்கப்பூரில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தது.  அதில் பணியாற்றிவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது, அப்போது ஜப்பானுடன் உறவு வைத்துக் கொண்டார் நேதாஜி.

    இந்தக் காரணத்தை முன்னிட்டு இந்தியாவைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியது ஜப்பான்.  இந்தியாவை கைப்பற்ற பெரும் எண்ணிக்கையிலான படைகள் தேவை. அவற்றை ஜப்பானிலிருந்து கடல் வழியாக கப்பல் மூலமாக கொண்டு வருவது சிரமம் என்பதால் தரைவழி பாதையை தேர்ந்தெடுத்து, சயாம் (தாய்லாந்து) முதல் பர்மா வரை ஒரு ரயில் பாதை ஒன்றை இட முடிவு செய்தது.

      அதன் ஐந்தாவது படை அணி மேற்பார்வையிட, 16 மாதங்களுக்குள் அந்த இரயில் பாதையை நிர்மாணித்து முடிக்க வேண்டுமென கட்டளையிட்டது.  அதற்கு ஏராளமான ஆள்பலம் தேவைப்பட்டது.  தொழில் நுட்ப வேலைகளுக்கு, தங்களிடம் போர்க்கைதிகளாய் இருந்த ஆங்கிலேய மற்றும் ஆஸ்திரேலிய படைவீரர்களை  பயன்படுத்திக் கொண்டனர்.  சுரங்கம் வெட்டுதல், மண் அள்ளுதல் போன்ற வேலைகளுக்கு அடிமட்டத் தொழிலாளிகள் நிறைய பேர் தேவைப்பட்டனர்.

      இதற்காக பெருமளவில் ஆசியதொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.  சயாமியர், மலாய் இனத்தவர்கள் தவிர, ஒரு இலட்சத்திற்கும் மேலான தமிழர்களும் அவர்களிடம் சிக்கினர் என மதிப்பிடப்படுகிறது.  ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த, தனியார் நிறுவனங்களில் பணி புரிந்த, தோட்டங்களையும் வயல்களையும் கவனித்துக்கொண்டிருந்த,
ஏன் சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்களைக்கூட விடவில்லை ஜப்பானின் கங்காணியர்கள்.


      ஏமாற்றி, வலியுறுத்தி என எப்படி பணியவைக்க வேண்டுமோ அப்படி.  போரினால் கடும் பஞ்சம் வேறு.  உணவுக்காக தவித்த, உயிருக்கு பயந்த, குடும்பத்தைக் காப்பாற்ற, தன் பிள்ளைகளை அழைத்துச்செல்லாமல் தடுக்க என ஒவ்வொருவருக்கும் அடிபணிந்து போக ஒவ்வொரு காரணம்.  ஒரு இலட்சம் தமிழர்களில் போர் முடிந்தவுடன் திரும்பியவர்கள் பத்தாயிரத்தை கூட தாண்ட மாட்டார்கள் என குத்துமதிப்பான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


      இதில் பணியாற்றிய ஆஸ்திரேலிய படைவீரர்கள் சிலர் தங்கள் அனுபவங்களை நூல்களாகக் கொண்டு வந்துள்ளனர்.  ஆங்கிலேயர்களோ “The Bridge on the River Kwai" என்ற திரைப்படத்தின் மூலம் தங்கள் அனுபவத்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கு சொல்லி விட்டனர்.  அவர்களின் வலிகள் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டன.   நம் பாடு தான் திண்டாட்டம்.


   வெகு சில நூல்களே அதைப் பதிவு செய்திருந்தன.  எப்போதோ நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்ய எண்ணி 1993’ஆம் ஆண்டு சண்முகம் எழுதியது தான் ”சயாம் மரண ரயில் - சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்”. இதை தமிழோசை பதிப்பகம் 2007 ஆம் ஆண்டு மறுவெளியீடு செய்திருக்கிறது.


      இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு தான் இதைப் பதிவு செய்ய வேண்டுமென ஒர் உந்துதல் ஏற்பட்டது. உண்மையைச் சொன்னால் இதற்கு முன், இதில் குறிபிடப்பட்டுள்ள ஒரு விவரமும் நான் கேள்விப்பட்டதுகூட கிடையாது. ஜப்பானிடம் சிக்கிய இந்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை, யூதர்களுக்கு நாஜி இழைத்த கொடுமைகளுக்கு இணையானது என இந்நூலின் பதிப்புரையில் சொல்லப்பட்டிருக்கிறது, படிக்க படிக்க அது எவ்வளவுஉண்மை என உணரமுடிகிறது.

      அந்த களத்தில் பஞ்சத்தினால் தன் குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பாமலும், தன் தந்தையை கண்டுபிடித்துவிடலாம் எனற நோக்கத்திலும் தானே சென்று இணையும் மாயா என்ற ஒரு இளைஞன் சுற்றியே கதையை சுழல விட்டு, தான் சொல்ல வந்த உண்மைகளை கதையெங்கும் தெளித்திருக்கிறார் ஆசிரியர் அதனூடே ஒரு மெல்லிய காதல்
கதையையும் சேர்த்து ஒரு சுவாரஸ்யம் சேர்க்க முனைந்திருக்கிறார் ( நமக்கு தான் எல்லாவற்றிலும் தேவைப்படுமே!!)..


      மரவள்ளிக்கிழங்கும், கருவாடும், சூப்பும் ஆகியவையே பெரும்பாலும் அவர்களின்உணவு.  உடம்பு முடியாவிட்டாலோ, விஷப்பூச்சிகளோ பாம்போ கடித்துவிட்டாலோ, அவர்களுக்காக யாரும் நிற்பதில்லை.


    ஆங்காங்கே விழுந்து அப்படியே இறக்க வேண்டியது தான், முகாம்களில் சீக்கானால், மருத்துவமனை அழைத்து செல்கிறோம் என்ற பெயரில், ஒதுக்குபுறமான ஒரு கொட்டகையில் போய் விட்டுவிடுவார்கள். கும்பல் கும்பலாய் வயிற்றுபோக்கும் காய்ச்சலுமாய் இறப்பை நோக்கி செல்ல வேண்டியது தான்.


    அழுகி நாறி இருந்தாலும், தங்களுக்கு வசதிப்பட்ட என்றாவது ஒரு நாளில் மொத்தமாய் குப்பை அள்ளுவது போல தள்ளுவண்டியில் ஏற்றி வந்து ஒரே பெரிய குழியாய் வெட்டி மொத்தமாய் போட்டு புதைத்துவிடுவார்களாம்.  எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால் அந்த கொட்டகையோடு கொளுத்திவிடவும் செய்வார்கள் போல. குற்றுயிரும் குலையுயிருமாய் கிடப்பவர்களுக்கும் மொத்தமாய் மோட்சம்.
 

    மறுபடியும் ஒர் கொட்டகை முளைக்கும். இதில் எல்லாம் தவறி பிழைத்தவர்கள் அவ்வப்போது போர்விமானங்கள் போட்ட குண்டுகளில் மடிந்தார்கள்.  எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்களுக்கு மரணம் காத்திருந்தது.

    ஆங்காங்கே ஒவ்வொரு பாத்திரத்தின் உணர்வுகள், குடும்பத்தை பற்றிய கவலைகள், தாங்களும் உயிரோடு அங்கிருந்து பிழைப்போமா என கேள்விகள்,, மாயாவின் காதல் கதை, அவனுடன், உடன் பிறந்தவனைபோல உறவாடும் வேலுவின் நட்பு, முடிவை ஒட்டி அவன் மரணம் என உணர்வுபூர்வமாக அந்த நூலில் விபரித்துள்ளார்.



தஞ்சை குமணன்

Thursday, 5 July 2012

சஞ்சய் தத் தமிழில் நடிக்கிறார்


ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்கள் ஆகும் வரிசையில் ரவி.கே.சந்திரன் தன்னையும் இணைத்துள்ளார்.

தனது முதல் படத்தின் நாயகனாக ஜீவாவை தேர்வு செய்து இருக்கிறார். ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இப்படத்திற்காக ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

இப்படத்தினை 'கோ', 'விண்ணைத்தாண்டி வருவாயா' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த R.S.Infotainment நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகக் இருக்கிறார் சஞ்சய் தத். ஏதோ இரண்டு அல்லது மூன்று காட்சிக்கு வருவார் என்றில்லாமல்,  படம் முழுக்க வருவது போன்ற ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.

இந்திய திரையுலகின் முக்கிய ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கும் படம் என்பதால் உடனே ஒ.கே கூறி விட்டாராம் சஞ்சய் தத். 

நாயகி தேடும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


நன்றி விகடன் டாட் காம்

தஞ்சை குமணன்

Saturday, 19 May 2012

ஐபிஎல் மேட்ச் பிக்சிங்:இலங்கை வீரருக்கு ரூ.10 கோடி வழங்கப்பட்டது?


ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில்,மேட்ச் பிக்சிங் எனப்ப்டும் போட்டி  நிர்ணயத்துக்காக இலங்கை வீரருக்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டது என்று ஆட்ட  நிர்ணயக்காரர் ஒருவர் சாட்சியமளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் அவர் தனது சாட்சியத்தில்,சில இந்திய வீரர்களும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக   குறிப்பிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கிரிக்கெட் மேட்ச் பிக்சிங் தொடர்பாக, மலாட் என்று அழைக்கப்படும் சோனு யோகேந்திரா  ஜலான் என்பவரும் பஹாஜி என்றழைக்கப்படும் தேவேந்திரா கோத்தாரி என்பவரும் கடந்த  17 ம் தேதியன்று மும்பையில் வைத்து குற்றப் புலனாய்வுத்துறையினரால் கைது  செய்யப்பட்டனர்.

இவர்கள் சர்வதேச ரீதியில் மேட்ச் பிக்சிங்சதியில் ஈடுபடுகின்றவர்கள் என்று  நம்பப்படுகிறது. 

இது தொடர்பாக நடத்தப்பட்ட விசாரணையில் கிடைத்த தகவல்களின்படி சோனு என்ற  கிரிக்கட் போட்டி நிர்ணயக்காரர், தமது சட்டவிரோத வர்த்தகத்தின் மூலம், மாதம்  ஒன்றுக்கு 500 கோடி ரூபாய் வருமானமாக பெறுவதாக தெரியவந்துள்ளது. 

இவருக்கு ஆப்கானிஸ்தான்,பாகிஸ்தான்,தென்னாப்ரிக்கா, சவூதி அரேபியா மற்றும்  இந்தியா ஆகிய இடங்களில் வாடிக்கையாளர்கள் உள்ளதாகவும் தெரியவந்துள்ளதாக  தகவ்ல்கள் கூறுகின்றன. 

நன்றி : விகடன்.காம்

தஞ்சை குமணன்

Friday, 18 May 2012

அ.தி.மு.க. ஆதரவுடன்தான் மதுரை ஆதீனமானேன்:நித்யானந்தா


அ.தி.மு.க. ஆதரவுடன்தான் தாம் மதுரை ஆதீனமாக பொறுப்பேற்றதாக நித்யானந்தா தெரிவித்துள்ளார்.

திருவாரூர் அருகே கச்சனத்தில் உள்ள கோவிலுக்கு இன்று தரிசனம் செய்ய வந்த நித்தியானந்தா,செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின்போது, ”அ.தி.மு.க.வின் ஆதரவுடன்தான் நான் இளைய ஆதீனமாக பொறுப்பேற்றேன்.இந்த அரசு எங்களுக்கு தகுந்த போலீஸ் பாதுகாப்பு அளிப்பதாலேயே எங்களால் பல இடங்களுக்கு சென்றுவர முடிகிறது.

காஞ்சி சங்கராச்சிரியார் ஜெயேந்திரர் எனக்கு எதிராக இனி குற்றச்சாட்டு எழுப்பினால்,அவர் மீது அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து முடிவெடுக்கப்படும். ஆதீனம் இடத்தை ஆக்கிரமித்து இருப்பவர்களை ஓடஓட விரட்டுவேன்”என்று கூறினார்.

நல்ல உலகமடா. விட்டா இவரு அறநிலையத்துறை மந்திரி கூட ஆவாரு

நன்றி : விகடன்.காம்

தஞ்சை குமணன்


Sunday, 22 April 2012

என்னதான் பார்த்தோமோ!


உதயங்கள் பல பார்த்திருப்போம்

நிகழ்வுகள் பல பார்த்திருப்போம்

கடமைகள் பல பார்த்திருப்போம்

வம்சங்கள் பல பார்த்திருப்போம்

மிருகங்க‌ள் பல பார்த்திருப்போம்

மனிதர்கள் பலர் பார்த்திருப்போம்

செய்கைகள் பல பார்த்திருப்போம்

குணங்கள் பல பார்த்திருப்போம்

சட்டங்கள் பல பார்த்திருப்போம்

வினாக்கள் பல பார்த்திருப்போம்

விடுதிகள் பல பார்த்திருப்போம்

திருத்தலங்கள் பல பார்த்திருப்போம்

பொய்மைகள் பல பார்த்திருப்போம்

வக்கிரங்கள் பல பார்த்திருப்போம்

பாசங்கள் பல பார்த்திருப்போம்

ஊர்திகள் பல பார்த்திருப்போம்

பக்திகள் பல பார்த்திருப்போம்

நட்புகள் பல பார்த்திருப்போம்

காதலயும் பலரால் பார்த்திருப்போம்

நயவஞ்சகங்களையும் பல பார்த்திருப்போம்

தந்திரங்கள் பல பார்த்திருப்போம்

அதிசயங்கள் பல பார்த்திருப்போம்

இளவுகள் பல பார்த்திருப்போம்

சடங்குகள் பல பார்த்திருப்போம்

பந்திகள் பல பார்த்திருப்போம்

பத்திகள் பல பார்த்திருப்போம்

புரட்சிகள் பல பார்த்திருப்போம்

சதிவேலைகள் பல பார்த்திருப்போம்

குரோதங்கள் பல பார்த்திருப்போம்

பயிற்றுருவித்தல் பல பார்த்திருப்போம்

பயிலுதல் பல பார்த்திருப்போம்

உபசாரங்கள் பல பார்த்திருப்போம்

துரோகங்க‌ள் பல பார்த்திருப்போம்

இனி நடப்பவற்றையும் பார்க்க இருக்கும்

தஞ்சை குமணன்

Wednesday, 28 March 2012

பூஜா முதல் அமலா வரை - ஆர்யா


ஆர்யா ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால், படம் பற்றிய தகவல்களைவிட அதிகமாக,  அப்பட நாயகிக்கும் ஆர்யாவிற்கும் காதல் என  கிசுகிசுக்கள் வரத் தொடங்கி விடும்.

' வேட்டை' படத்தில் ஆர்யாவிற்கு நாயகியாக நடித்த அமலாவிற்கும் இவரும் நெருங்கி பழகி வருவதாக தகவல்கள் வெளியாகின.

ஆர்யா தன் வீட்டில் தனது நண்பர்களுக்கும்  CCLல் போட்டியில் விளையாடிய சென்னை அணிக்கும் விருந்து அளித்தார்.

அவ்விருந்தில் அமலா கலந்து கொள்ளவில்லை. பிரபுதேவா பிரிவிற்கு பிறகு எந்த ஒரு நிகழ்ச்சியிலும் கலந்து கொள்வதை தவிர்த்து வந்த நயன் இதில் கலந்து கொண்டார்.

உடனே அமலாபாலை உதறிவிட்டு நயனுடன் கூட்டு சேர்ந்து இருக்கிறார் ஆர்யா என கோலிவுட் கிசுகிசுத்தது.  இதற்கு அமலா " ஆர்யாவுக்கும் எனக்கும் நட்பு தொடர்கிறது. அவரோடு நான் தொடர்பில்தான் இருக்கிறேன். ஆர்யா வீட்டில் விருந்து நடந்தபோது நான் துபாயில் இருந்தேன். அதனால்தான் அதில் பங்கேற்க முடியவில்லை" என்று தெரிவித்தார்.

இது குறித்து ஆர்யாவிடம் கேட்ட போது " என்னுடன் நடிக்கும் நாயகிகள் அனைவருடன் இணைத்து கிசுகிசுக்கள் வருகின்றன. பூஜா தொடங்கி இப்போது அமலா பால் வரை என்னை இணைத்து கிசுகிசு வருகிறது.

எனக்கு அனைவருமே நண்பர்கள் தான். நான் மிகவும் ஜாலியான் ஆள். அனைவருமே எனக்கு ஒன்று தான். ஒருவர் மட்டும் மிகவும் நெருக்கம் என்று என்னால் தனித்தனியாக பிரிக்க முடியாது. 

என்னுடைய திருமணம் அனைவருக்கும் தெரிந்து தான் நடக்கும். " என்று தெரிவித்து இருக்கிறார்.

'கொசுறு' கபாலி : "பட், உங்க நேர்மை எனக்கு பிடிச்சிருக்கு! "

தஞ்சை குமணன்

நன்றி விகடன் டாட் காம்