அதனால் முதல் காட்சிக்கு நான் செல்லவில்லை. ஆனால் அந்த படத்தின் ரிசல்ட்
கேள்விபட்டவுடன் இரவுக்காட்சிக்கு சென்றே ஆக வேண்டும் என்று முடிவு செய்து
படையை திரட்டிக் கொண்டு கிளம்பினால் சத்யம் ஹவுஸ்புல். அடுத்ததாக சென்றது
மெலோடி என்று நினைக்கிறேன் நினைவில் இல்லை, அங்கும் ஹவுஸ்புல். அண்ணாவில்
முதல் வரிசையில் தான் இடமிருந்தது. அண்ணா திரையரங்கம் எனக்கு தெரிந்து
ஹவுஸ்புல்லானது அன்று தான்.
முன்னாபாய் படத்தை விட லகே ரகோ முன்னாபாய் படம் ட்ரிபுள் ஹிட்.
காட்சியமைப்பிலும். அப்படித்தான். கிட்டத்தட்ட காலாவதியாகி விட்டது என்று
நினைத்த காந்தியிசம் இந்த காலத்திற்கு எப்படி பயன்படுத்த முடியும் என்பதை
பக்காவான திரைக்கதையில் சொல்லி அசத்தியிருந்தார். மதிப்பில் மேலும் சில படி
உயர்ந்தார் இயக்குனர்.
No comments:
Post a Comment