Followers

Saturday, 15 February 2014

திருச்சியின் தேவதையே எனக்கான சுந்தரியே

அன்புள்ளம் கொண்ட மக்களே,
 நீண்ட இடைவேளைக்கு பிறகு ஒரு பதிவு. என்னவளுக்காக.

திருச்சியில் வாழும் மனதிற்கினிய மங்கையே
என் வாழ்வின் கங்கையே
மனமெல்லாம் பொங்கியே
உனக்காக மட்டும் சொல்கிறேன் இங்கயே
இனிய காதலர் தின நல்வாழ்த்துக்கள்


"தாவணியில் தேவதையாய்
கண்ணுக்கு தோன்றியதால்
தினம் அவளை காணவேண்டி
வேட்டியும் விபூதி பட்டையுமாய்
சாயரட்சை வேளையில்
பெரிய கோவிலில் காத்திருந்தேன்


தோழியுடன் வந்தமரும் அவளை
தரிசனம் செய்ய வேண்டி
எப்பொழுதும் பின்வரிசை
இடத்தினிலே நிரந்தரமாய்
நின்றிருந்தேன் ஒத்தையிலே

கண்கள் மெல்ல மூடி
மெல்லியதாய் மந்திரத்தை
மனமுருகி வேண்டிக் கொண்டே
பிரார்த்திக்கும் அவள் முகத்தை
காண கண் கோடி வேண்டும்"

என்று உனை நினைத்து காதலும் கசிந்துருக
கவிதை தான் பாடிடவே ஏங்குதே என் மனமே

கரம்பிடிக்கும் நாளை எண்ணி காத்திருக்கேன்
கிளிபோலே
அந்த நாளை நினைத்து மனது ஆர்பரிக்கிறது
அலைபோலே

தஞ்சை குமணன்

Tuesday, 26 November 2013

கள்ள மனம் கயவு குணம்

ரொம்ப நாட்களுக்கு பிறகு மீண்டும் இன்று எழுதுகிறேன்

தோணியதை மட்டும் பெரிதாக நினைக்கும்
பிஞ்சு மனம் பிள்ளைகுணம் எதற்கு,
கள்ள மனம் கயவு குணம் எதற்கு
காட்டுக்குள் சிங்கம் பசித்திருந்தது எதற்கு
சூறாவளி நம்மை என்ன செய்யும்
மழலைகளுக்கு தெரியாத பேய்களின் குணம் எதற்கு
பூச்சிக்கு தெரியாத கடலின் ஆழம் எதற்கு
நல்லவன் என்றும் வாழ்வான் என்பதற்கு
காணும் எதுவும் நமக்கே சொந்தம் அல்ல
பிச்சை போடவும் பணமும் இருக்கனுமா
நல்ல சொக்காய் போட்டவன் பணக்காரன் அல்ல
என்னாலும் எதுவும் செய்ய முடியுமா என்ன
பூமிக்கு என்று கடவுள் வர போகிறாரோ
பங்கு வர்த்தகங்களும் பரிமாற்றங்களும் எதற்கு
பாராட்டுக்கள் என்றைக்கு எல்லோருக்கும் கிட்டும்
என்று யாருக்கும் தலைவலி வராது
சளி பிடித்தாலும் பால் அருந்தலாமோ
நயவஞ்சகம் இன்னும் ஆங்காங்கே இருக்கத்தான் செய்கிறது
வேலை என்று எல்லோருக்கும் கிட்டும்
எல்லோராலும் பேச முடியம் தானே
அருஞ்செயல் எல்லோராலும் செய்ய முடியும் தானே
நான் என்று பிழைத்துக்கொள்வேன்....

தஞ்சை குமணன்

Wednesday, 29 May 2013

இந்தியாவில் நாத்திகர்கள் அதிகரிக்கின்றனர்

கண்ட கண்ட மதவாதிகள் தான் கும்பிடும் மதத்தையும் மூடநம்பிக்கை பழக்க வழக்கத்தையும் தான் உலகில் பெரியது என்று எண்ணும் போது என்னைப் போன்ற பகுத்தறிவாளர்கள் நாங்கள் தான் இந்தியாவில் அதிகம் என்று எண்ணுவதில் தப்பேதும் இல்லை.

மூடப் பழக்கமுள்ள மதவாதிகளே மூடிக் கொள்ளவும். இல்லை கழுவி வைத்துக் கொள்ளவும். 

தஞ்சை குமணன்

Sunday, 11 November 2012

INNUM NIRANDHARA VELAI KIDAIKALAI


Monday, 13 August 2012

அனிருத் ஆன்ட்ரியாவின் சூடான முத்தம்




எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும்..........

Monday, 6 August 2012

மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு!


 
        சயாம் மரண ரயில் - மறக்கப்பட்ட தமிழர்களின் ஒர் வரலாறு...! எத்தனைப் பேருக்கு தெரிந்திருக்கும் இந்த தமிழர்களை...? இவர்களுக்காக ஏன் ஒரு நினைவுக்குறிப்பு கூட இல்லை...? ஏன் இவர்களின் வரலாறு மறக்கப்பட்டது...? இவர்களைப் பற்றி எழுத ஏன் இவ்வளவு காலம் ஒருவருக்கு கூட மனம் வரவில்லை...? முன்னுரை மற்றும் ஆசிரியரின் உரையைப் படிக்கும் போதே தோன்றிய கேள்விகள் தான் இவை.  இரண்டாம் உலகப் போர் சமயத்தில் ஜப்பான், அப்போதைய நிலைமையை சாதகமாக்கி தன் எல்லைகளை விரிவாக்கும் முயற்சியில் இறங்கியது.

    மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து, மற்றும் பர்மாவும் அதன் பிடியில் விழுந்தது. அப்போது தான் நேதாஜி காங்கிரஸை விட்டு விலகி இங்கிலாந்துக்கு எதிரான நாடுகளின் உதவியை நாடினார்.  அவரது இந்திய தேசிய இராணுவம் சிங்கப்பூரில் இருந்து இயங்கிக் கொண்டிருந்தது.  அதில் பணியாற்றிவர்களில் பெரும்பாலானோர் தமிழர்கள் என்று கூறப்படுகிறது, அப்போது ஜப்பானுடன் உறவு வைத்துக் கொண்டார் நேதாஜி.

    இந்தக் காரணத்தை முன்னிட்டு இந்தியாவைக் கைப்பற்றும் திட்டத்தில் இறங்கியது ஜப்பான்.  இந்தியாவை கைப்பற்ற பெரும் எண்ணிக்கையிலான படைகள் தேவை. அவற்றை ஜப்பானிலிருந்து கடல் வழியாக கப்பல் மூலமாக கொண்டு வருவது சிரமம் என்பதால் தரைவழி பாதையை தேர்ந்தெடுத்து, சயாம் (தாய்லாந்து) முதல் பர்மா வரை ஒரு ரயில் பாதை ஒன்றை இட முடிவு செய்தது.

      அதன் ஐந்தாவது படை அணி மேற்பார்வையிட, 16 மாதங்களுக்குள் அந்த இரயில் பாதையை நிர்மாணித்து முடிக்க வேண்டுமென கட்டளையிட்டது.  அதற்கு ஏராளமான ஆள்பலம் தேவைப்பட்டது.  தொழில் நுட்ப வேலைகளுக்கு, தங்களிடம் போர்க்கைதிகளாய் இருந்த ஆங்கிலேய மற்றும் ஆஸ்திரேலிய படைவீரர்களை  பயன்படுத்திக் கொண்டனர்.  சுரங்கம் வெட்டுதல், மண் அள்ளுதல் போன்ற வேலைகளுக்கு அடிமட்டத் தொழிலாளிகள் நிறைய பேர் தேவைப்பட்டனர்.

      இதற்காக பெருமளவில் ஆசியதொழிலாளர்கள் கொண்டு செல்லப்பட்டனர்.  சயாமியர், மலாய் இனத்தவர்கள் தவிர, ஒரு இலட்சத்திற்கும் மேலான தமிழர்களும் அவர்களிடம் சிக்கினர் என மதிப்பிடப்படுகிறது.  ரப்பர் தோட்டத்தில் வேலை செய்த, தனியார் நிறுவனங்களில் பணி புரிந்த, தோட்டங்களையும் வயல்களையும் கவனித்துக்கொண்டிருந்த,
ஏன் சாலைகளில் சென்று கொண்டிருந்தவர்களைக்கூட விடவில்லை ஜப்பானின் கங்காணியர்கள்.


      ஏமாற்றி, வலியுறுத்தி என எப்படி பணியவைக்க வேண்டுமோ அப்படி.  போரினால் கடும் பஞ்சம் வேறு.  உணவுக்காக தவித்த, உயிருக்கு பயந்த, குடும்பத்தைக் காப்பாற்ற, தன் பிள்ளைகளை அழைத்துச்செல்லாமல் தடுக்க என ஒவ்வொருவருக்கும் அடிபணிந்து போக ஒவ்வொரு காரணம்.  ஒரு இலட்சம் தமிழர்களில் போர் முடிந்தவுடன் திரும்பியவர்கள் பத்தாயிரத்தை கூட தாண்ட மாட்டார்கள் என குத்துமதிப்பான புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.


      இதில் பணியாற்றிய ஆஸ்திரேலிய படைவீரர்கள் சிலர் தங்கள் அனுபவங்களை நூல்களாகக் கொண்டு வந்துள்ளனர்.  ஆங்கிலேயர்களோ “The Bridge on the River Kwai" என்ற திரைப்படத்தின் மூலம் தங்கள் அனுபவத்தை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே உலகத்திற்கு சொல்லி விட்டனர்.  அவர்களின் வலிகள் ஆவணப்படுத்தப்பட்டுவிட்டன.   நம் பாடு தான் திண்டாட்டம்.


   வெகு சில நூல்களே அதைப் பதிவு செய்திருந்தன.  எப்போதோ நடந்த நிகழ்வுகளைப் பதிவு செய்ய எண்ணி 1993’ஆம் ஆண்டு சண்முகம் எழுதியது தான் ”சயாம் மரண ரயில் - சொல்லப்படாத மெளன மொழிகளின் கண்ணீர்”. இதை தமிழோசை பதிப்பகம் 2007 ஆம் ஆண்டு மறுவெளியீடு செய்திருக்கிறது.


      இந்த புத்தகத்தைப் படித்துவிட்டு தான் இதைப் பதிவு செய்ய வேண்டுமென ஒர் உந்துதல் ஏற்பட்டது. உண்மையைச் சொன்னால் இதற்கு முன், இதில் குறிபிடப்பட்டுள்ள ஒரு விவரமும் நான் கேள்விப்பட்டதுகூட கிடையாது. ஜப்பானிடம் சிக்கிய இந்த தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமை, யூதர்களுக்கு நாஜி இழைத்த கொடுமைகளுக்கு இணையானது என இந்நூலின் பதிப்புரையில் சொல்லப்பட்டிருக்கிறது, படிக்க படிக்க அது எவ்வளவுஉண்மை என உணரமுடிகிறது.

      அந்த களத்தில் பஞ்சத்தினால் தன் குடும்பத்திற்கு பாரமாக இருக்க விரும்பாமலும், தன் தந்தையை கண்டுபிடித்துவிடலாம் எனற நோக்கத்திலும் தானே சென்று இணையும் மாயா என்ற ஒரு இளைஞன் சுற்றியே கதையை சுழல விட்டு, தான் சொல்ல வந்த உண்மைகளை கதையெங்கும் தெளித்திருக்கிறார் ஆசிரியர் அதனூடே ஒரு மெல்லிய காதல்
கதையையும் சேர்த்து ஒரு சுவாரஸ்யம் சேர்க்க முனைந்திருக்கிறார் ( நமக்கு தான் எல்லாவற்றிலும் தேவைப்படுமே!!)..


      மரவள்ளிக்கிழங்கும், கருவாடும், சூப்பும் ஆகியவையே பெரும்பாலும் அவர்களின்உணவு.  உடம்பு முடியாவிட்டாலோ, விஷப்பூச்சிகளோ பாம்போ கடித்துவிட்டாலோ, அவர்களுக்காக யாரும் நிற்பதில்லை.


    ஆங்காங்கே விழுந்து அப்படியே இறக்க வேண்டியது தான், முகாம்களில் சீக்கானால், மருத்துவமனை அழைத்து செல்கிறோம் என்ற பெயரில், ஒதுக்குபுறமான ஒரு கொட்டகையில் போய் விட்டுவிடுவார்கள். கும்பல் கும்பலாய் வயிற்றுபோக்கும் காய்ச்சலுமாய் இறப்பை நோக்கி செல்ல வேண்டியது தான்.


    அழுகி நாறி இருந்தாலும், தங்களுக்கு வசதிப்பட்ட என்றாவது ஒரு நாளில் மொத்தமாய் குப்பை அள்ளுவது போல தள்ளுவண்டியில் ஏற்றி வந்து ஒரே பெரிய குழியாய் வெட்டி மொத்தமாய் போட்டு புதைத்துவிடுவார்களாம்.  எண்ணிக்கை மிக அதிகமாக இருந்தால் அந்த கொட்டகையோடு கொளுத்திவிடவும் செய்வார்கள் போல. குற்றுயிரும் குலையுயிருமாய் கிடப்பவர்களுக்கும் மொத்தமாய் மோட்சம்.
 

    மறுபடியும் ஒர் கொட்டகை முளைக்கும். இதில் எல்லாம் தவறி பிழைத்தவர்கள் அவ்வப்போது போர்விமானங்கள் போட்ட குண்டுகளில் மடிந்தார்கள்.  எந்தப் பக்கம் திரும்பினாலும் அவர்களுக்கு மரணம் காத்திருந்தது.

    ஆங்காங்கே ஒவ்வொரு பாத்திரத்தின் உணர்வுகள், குடும்பத்தை பற்றிய கவலைகள், தாங்களும் உயிரோடு அங்கிருந்து பிழைப்போமா என கேள்விகள்,, மாயாவின் காதல் கதை, அவனுடன், உடன் பிறந்தவனைபோல உறவாடும் வேலுவின் நட்பு, முடிவை ஒட்டி அவன் மரணம் என உணர்வுபூர்வமாக அந்த நூலில் விபரித்துள்ளார்.



தஞ்சை குமணன்

Thursday, 5 July 2012

சஞ்சய் தத் தமிழில் நடிக்கிறார்


ஒளிப்பதிவாளர்கள் இயக்குனர்கள் ஆகும் வரிசையில் ரவி.கே.சந்திரன் தன்னையும் இணைத்துள்ளார்.

தனது முதல் படத்தின் நாயகனாக ஜீவாவை தேர்வு செய்து இருக்கிறார். ஆஸ்கர் விருது பெற்ற ஒலி வடிவமைப்பாளர் ரசூல் பூக்குட்டி, படத்தொகுப்பாளர் ஸ்ரீகர் பிரசாத் ஆகியோர் இப்படத்திற்காக ஒப்பந்தமாகி இருக்கிறார்கள்.

இப்படத்தினை 'கோ', 'விண்ணைத்தாண்டி வருவாயா' உள்ளிட்ட படங்களைத் தயாரித்த R.S.Infotainment நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

இப்படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிகக் இருக்கிறார் சஞ்சய் தத். ஏதோ இரண்டு அல்லது மூன்று காட்சிக்கு வருவார் என்றில்லாமல்,  படம் முழுக்க வருவது போன்ற ஒரு முக்கிய பாத்திரத்தில் நடிக்க சம்மதித்து இருக்கிறார்.

இந்திய திரையுலகின் முக்கிய ஒளிப்பதிவாளர் ரவி.கே.சந்திரன் இயக்கும் படம் என்பதால் உடனே ஒ.கே கூறி விட்டாராம் சஞ்சய் தத். 

நாயகி தேடும் படலம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.


நன்றி விகடன் டாட் காம்

தஞ்சை குமணன்