Followers

Friday, 23 March 2012

டிவிஸ்ட்டுகள் நிறைந்த மாற்றான்


'அயன்' கூட்டணி மீண்டும் இணைந்து வெளியாக இருக்கும் படம் 'மாற்றான்'.

இப்படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வருகின்றன. ஆனால் படக்குழு இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த ஒரு தகவலையும் வெளியிடவில்லை.

படம் ஆரம்பிக்கும் போது வெளியான போஸ்டர் தவிர, எந்த ஒரு புகைப்படம் கூட வெளியாகாமல் பாதுகாத்து வருகிறது படக்குழு.

'ஏழாம் அறிவு' படத்திற்குப் பிறகு இப்படத்திற்கு தொடர்ச்சியாக 8 மாதங்கள் தேதிகள் ஒதுக்கி,  கூடுதல் கவனம் செலுத்தி வருகிறார் சூர்யா.

' கொய்யும் கண்கள் மெய்யும் பேசுமா ' என்ற விவேகா வரிகளில் ஹாரிஸ் ஜெயராஜ் ஒரு மெலடி பாடலை ' மாற்றான் ' படத்திற்காக சமீபத்தில் தயார் செய்து இருக்கிறார்.

படத்தின் எடிட்டர் ஆண்டனி தனது டிவிட்டர் இணையத்தில் " மாற்றான் படம் இங்கே ஒரு டிவிஸ்ட், அங்கே ஒரு டிவிஸ்ட் என்று ஒரே டிவிஸ்ட்டா போதுபா படம்.. இடைவேளையில் சீட்டை விட்டு எந்திரிக்க மாட்டீர்கள் அங்கேயும் இருக்கிறது ஒரு டிவிஸ்ட் " என்று தெரிவித்து இருக்கிறார்,

'கொசுறு' கபாலி : " ஏன்.. தியேட்டர் சீட்ல ஃபெவிகால் தடவி வெச்சிருவாங்களோ..?! "


தஞ்சை குமணன்

நன்றி விகடன்.காம்

Wednesday, 21 March 2012

எனக்கும் சித்தார்த்துக்கும் ஒண்ணுமில்லை - ஸ்ருதிஹாஸன்


கமலை போலவே பல்வேறு செய்திகளில் சமீபகாலமாக அடிபட்டு வருபவர் ஸ்ருதிஹாசன்.

ஹைதராபாத்தில் நடைபெற்ற ' 3 ' படத்தின் தெலுங்கு பதிப்பின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டார். தனுஷ், ஐஸ்வர்யா தனுஷ், ஸ்ருதிஹாசன், அனிருத் உள்ளிட்ட அனைவரும் இவ்விழாவில் கலந்து கொண்டார்கள்.

அப்போது பேசிய ஸ்ருதிஹாசன் " தனுஷ் உடன் என்னை இணைத்து பல்வேறு செய்திகள் வலம் வருகின்றன. அச்செய்திகள் எல்லாமே பொய். நாங்கள் இருவருமே நல்ல நண்பர்கள், அவ்வளவு தான்.

' 3 ' படத்தில் எனது கதாபாத்திரம் மிகவும் சவாலானது. எனது திரையுலக வாழ்வின் ஆரம்பத்திலேயே  இது போன்ற பாத்திரத்தில் நடித்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. " என்று தெரிவித்தார்.

மேலும் முதலில் சித்தார்த்துடன் இணைத்து செய்திகள் வலம் வந்தது குறித்து முதன் முறையாக பேசிய  ஸ்ருதி " சித்தார்த்துக்கும் எனக்கும் இடையில் ஒன்றும் இல்லை. அவரும் என்னைப்போல் ஒரு தொழில்முறைக் கலைஞர்.. அவ்வளவு தான்" என்று தெரிவித்து இருக்கிறார்.

'கொசுறு' கபாலி : 3 படத்தில் இடம்பெற்றுள்ள ' கண்ணழகா..' பாடலை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் பாடியிருக்கிறார் ஸ்ருதி!

தஞ்சை குமணன்

நன்றி : விகடன்

Thursday, 1 March 2012

பருத்தி வீரனுக்கு எதிராக அமீர்


அமீர் இயக்கத்தில் கார்த்தி, ப்ரியாமணி நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான படம் 'பருத்திவீரன்'. இப்படம் பெரும் வரவேற்பை பெற்றது மட்டுமல்லாமல் அமீர் மற்றும் ப்ரியாமணி இருவருக்கும் தேசிய விருது கிடைத்தது.

படத் தயாரிப்பாளர்களான ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் பருத்திவீரன் படத்தின் தெலுங்கு ரீமேக்கை வெளியிட தீர்மானித்து அதற்கான பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது. படத்திற்கு 'PALANTI VEERUDU' என்று தலைப்பிட்டு இருக்கிறார்கள்.

இப்படத்தை மார்ச் 2ம் தேதி வெளியிட திட்டமிட்டனர். இப்படத்திற்கு எதிராக போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்து இருக்கிறார் இயக்குனர் அமீர்.

இது குறித்து அமீர் " என்னுடைய பருத்தி வீரன் திரைப்படத்தை என்னுடைய அனுமதி இல்லாமல், எனக்கான ரைட்ஸ், ராயல்ட்டி தொகை எதுவுமே கொடுக்காமல் தெலுங்கில் 2ம் தேதி வெளியாக முடிவு செய்து இருக்கிறது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம்.

இது தெரிந்து நான் ஏற்கனவே ஜெமினி கலர் லேப்பிற்கு சென்று,  நீங்கள் தெலுங்கு டப்பிங் ரைட்ஸ், ரீமேக் ரைட்ஸ் நெகட்டிவ் கொடுக்க கூடாது  என்று லெட்டர் கொடுத்தேன்.

அவர்களும் அதை வாங்கி வைத்துக் கொண்டு,  நாங்கள் யாருக்கும் தரமாட்டோம் என்று கூறினார்கள். ஆனால் இப்போது ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் மற்றும் ஜெமினி இருவருமே என்னை ஏமாற்றி தெலுங்கில் இப்படத்தினை வெளியிட தீர்மானித்து இருக்கிறார்கள்.

இப்போது நான் ஒரு கதை, திரைக்கதை ஆசிரியராக எனது படத்தினை என்னுடைய அனுமதி இல்லாமல் வெளியிடுகிறார்கள் என்று போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்து இருக்கிறேன். " என்று தெரிவித்துள்ளார்.

இப்புகாரால் 'பருத்திவீரன்' தெலுங்கு பதிப்பு படம் வெளியாகுமா என்று சந்தேகம் எழுந்துள்ளது. 

தஞ்சை குமணன்

Wednesday, 29 February 2012

இளையராஜாவின் இசையில் நீ தானே என் பொன் வசந்தம்

கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கி வரும் படம் 'நீதானே என் பொன்வசந்தம்'. ஜீவா, சமந்தா, சந்தானம் மற்றும் பலர் நடித்து வருகிறார்கள்.

இப்படத்திற்கு தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இப்படத்தை தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளிலும் ஒரே சமயத்தில் இயக்கி வருகிறார் கெளதம்.

கெளதம் மேனன் படங்களில் பாடல்களுக்கு முக்கியத்துவம் இருக்கும்.  முதன் முறையாக 'நீதானே என் பொன்வசந்தம்' படத்தின் பாடல்களுக்கு இளையராஜாவோடு கைகோர்த்து இருக்கிறார் கெளதம் மேனன்.

காதலர் தினத்தன்று இப்படத்தின் FIRST LOOK, YOUTUBE இணையத்தில் வெளியிட்டார்கள். படத்தின் பாடல்களுக்கான பணிகளில் ஈடுபட்டு வருகிறார் இளையராஜா.

இந்நிலையில் பாடல்கள் குறித்து கெளதம் மேனன் தனது டிவிட்டர் இணையத்தில் " 'நீதானே என் பொன்வசந்தம் படத்தின் தமிழ்  மற்றும் தெலுங்கு பதிப்பில் இளையராஜா, யுவன், கார்த்திக் பாடியுள்ளார்கள். அதைப் பார்ப்பதே பெரும் ஆனந்தமாக இருந்தது. நேற்று இளையராஜா தன் குரலில் ஒரு பாடல் பதிவு செய்தார். " என்று தெரிவித்துள்ளார்.

இளையராஜா இப்படத்தின்  இசைக்காக ஹாங்கேரி நாட்டிற்கு சென்று பதிவு செய்ய உள்ளார்.

தஞ்சை குமணன்

Wednesday, 8 February 2012

ரஜினியின் ராணா தான் கோச்சடையானாக உருமாறுகிறதோ?


ரஜினி நடிக்க இருக்கும் படம் ' கோச்சடையான்' . தீபிகா படுகோன், சரத்குமார், சிநேகா, நாசர், ஆதி, ஷோபனா, ஜாக்கி ஷெரப் உள்ளிட்டோர் இப்படத்திற்காக ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். கே.எஸ்.ரவிகுமார் மேற்பார்வையில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்க இருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வருகிறார். EROS நிறுவனம் MEDIA ONE நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்க இருக்கிறது.

கோச்சடையான் படம் ஆரம்பிக்கும் போதே ' ராணா ' படம் கைவிடப்பட்டதா என்ற கேள்விக்கு, ' கோச்சடையான் ' படம் முடிவடைந்த பின் 'ராணா' படத்தில் ரஜினி நடிப்பார் என்று கூறப்பட்டது. இந்நிலையில் ' கோச்சடையான் ' படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்தவர்களை பார்க்கும் போது ரசிகர்களுக்கு பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.

'ராணா' படத்தின் நாயகியாக தீபிகா படுகோன் ஒப்பந்தம் செய்யப்பட்டு,  அந்த படபூஜையில் கலந்து கொண்டார். அவரையே ' கோச்சடையான் ' நாயகியாக ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள். சரத்குமார், சிநேகா இருவருமே ' ராணா ' படத்திற்கு ஒப்பந்தம் செய்தார்கள். தற்போது இருவரையும் ' கோச்சடையான் ' படத்திற்கும் ஒப்பந்தம் செய்து இருக்கிறார்கள்.

'ராணா' படத்திற்காக கொடுக்கப்பட்ட சம்பளத்தை அப்படியே ' கோச்சடையான் ' படத்திற்காக மாற்றி இருக்கிறார்களாம். தீபிகா படுகோன், சரத்குமார், சிநேகா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார் உள்ளிட்டோர் அனைவருமே ' ராணா ' படத்திற்காக கொடுக்கப்பட்ட தேதிகளை தான் ' கோச்சடையான் ' படத்திற்காக ஒதுக்கி கொடுத்து இருக்கிறார்கள்.

செளந்தர்யா ரஜினிகாந்த் 'சுல்தான், தி வாரியர்' என்ற ஒரு அனிமேஷன் படத்தினை நீண்ட காலமாக இயக்கி வந்தார். அப்படமும் கைவிடப்பட்டதாம். ' சுல்தான். தி வாரியர்', 'ராணா' இரு படங்களும் இணைந்ததே ' கோச்சடையான் ' என்கிறது கோலிவுட் வட்டாரங்கள்.

சுல்தானோ, ராணாவோ, கோச்சடையானோ  என்ன படமாக இருந்தாலும் ரஜினியை எப்போது திரையில் காண்பது என்று ஏங்கி வருகிறார்கள் ரஜினி ரசிகர்கள்.


தஞ்சை குமணன்

Sunday, 5 February 2012

என்னவளே






உன் கண்களை பார்த்த முதல் நிமிடம்
காதலின் முதல்வரி தொடங்கியது!

எனது உயிரின் முகவரி
பெண்னே உன்னிடம் மாறியது!

உன் முகம் பார்க்கும் ஒவ்வொரு நாளும்
எனக்கு திபாவளி!

அன்பே உன் குறல்கேட்டால் போதும்
அதுதான் இங்கே கீதாஞ்சலி!

நீ எதிர்வரும் சமயம்
புன்னகையாலே எனது முகத்தை அலங்கரிப்பேன்!

கடந்துபோனதும் கவலையினாலே
கண்கலிரண்டிலும் நீர் வடிப்பேன்!

பாடும் குயிலுக்கு
உன் பாதகொலுசுகள் பள்ளிக்கூடம்!




நீ தாவணி லாக்கரில் பூட்டியத் தங்கம்
நானே உன்னை களவாட வந்த சி்ங்கம்!

என்னை போல பயலுக்கு
கண்னே உந்தன் ஞாபகந்தான்
கவிதை எழுத தோனுச்சு!

உன் தாணித் தலைப்புக்கு
எழுதிய கவிதையை நோபல் பரிசுக்கு
அனுப்பிவைப்பேன்!




உயிரை தடவி உனது பெயரை
உதடுகளாளே உச்சரிப்பேன்!

இடைவிடாமல் உன் முகம் பார்க்க
என் இமைகளைக் கூட கத்திரிப்பேன்!

உன் காலடி சுவடுகள் கலைந்தாலும்
இந்த காதலன் இதயம் தாங்காது!

நீ ஒரு நொடி நேரம் பிரிந்தாலும்


இந்த உயிர் கடிகாரம் ஓடாது!.......

தஞ்சை குமணன்


நான் மட்டும் தானா?





பொதுத்துறை வங்கியில் நான் கணக்குகள் தணிக்கை செய்யும் பணியில் இருப்பது தாங்கள் அனைவரும் முன்பே அறிந்ததே தினம் தினம் பல பல எண்ணங்களும் கற்பனைகளும் சிந்தனைகளும் ஒன்றுக்கும் குறைச்சல் இல்லை அவற்றையும் மீறி நான் அங்கு ஆர்வமுடன் பணியாற்றி வருகிறேன். 

அலுவலகத்தில் எனது அருமை நண்பர்கள் பற்றி இந்த கட்டுரையில் சொல்லியே ஆகவேண்டியுள்ளது. முதலில் எனது தந்தைக்கு மிக்க நன்றி அவரால் தான் இப்பணி எனக்கு கிட்டியது அவரே எனது முதல் சிறந்த நண்பர் மற்ற அனைத்து அலுவலக நண்பர்களயும் என்னால் ஒன்று இரண்டு என்று என்னால் வரிசைப்படுத்த முடியவில்லை முன்கோபி மோடுமுட்டி பொன்ற சூழ்நிலை உணராத பிடிவாத குணாதிசயம் கொண்ட இவர்களுடன் நான் அங்கு அடிக்கும் கலாட்டா கூத்துக்கள் அனைத்தும் அன்றைய பணிக்கு பாதிப்பு ஏற்படாத வண்ணம் எங்களது கூத்தும் கும்மாளமும் இருக்கும்.

பணியி்ன் இடையே கிடைக்கும் காபி தேனீர் மிக மிக அருமையாக இருக்கும். அதற்கென நாங்க‌ள் நேரம் ஒதுக்கி  ருசிப்போம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொவொருவர் செலவு செய்வர். எங்க‌ளது குழுவில் நாங்களே முடிவு செய்து கொள்வோம், எங்களது குழுவில் இரண்டு திரமையான ஆசிரியர்கள் வேறு எங்களுக்கு உள்ளனர் அவர்களுக்கு அருகில் நானே அதிக வயதுள்ளவன். மற்றவர்கள் என்னை விட வயதில் சிறியவர்கள். 

ஒவ்வொருவருக்குள்ளும் ஒவ்வொரு குணாதிசயம் உண்டு. அதற்காகவே நான் அவர்களுடன் விரும்பி பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். 

தஞ்சை குமணன்.